திறந்த மடல்… 1962ல் அண்ணாவுக்கு.. 2022ல் பிரதமர் மோடிக்கு…

புலவர் க.முருகேசன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

1962ல் அண்ணாவுக்கு..

2022ல் பிரதமர் மோடிக்கு…

மனதில்படும்படி  மடல்…

“1962ல் அண்ணா திராவிட நாடு

கோரிக்கையைக் கைவிடுகிறேன் என்று

அறிவித்ததைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல்

 

‘அண்ணா, நீங்கள் ஒரு கோழை

அக்கா வந்து கொடுக்கச்

சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?’

என்ற பாரதிதாசன் வரிகளைச் சுட்டிக்காட்டி அண்ணாவுக்கே கடிதம் எழுதியவர் தான் புலவர் முருகேசன். இவரின் கடிதக் கணைகளுக்குக் கலைஞர், வீரமணி, வைகோ என்று யாரும் தப்பவில்லை. மனதில் பட்டதை எழுதமாட்டார், மனதில்படும்படி எழுதுவார். அதுதான் புலவரின் இயல்பும் சிறப்பும்கூட. இன்னும் அவர் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்..இருப்பார் என புலவர் க.முருகேசன் குறித்து, திருச்சி என்.செல்வேந்திரன் ஒரு விழாவில் பேசியது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அத்தகு பெரும் அரசியல் அறிஞர் நம் அங்குசம் செய்தி இதழின் வாயிலாக பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு ‘திறந்த மடல்’ ஒன்றை எழுதி நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

ஆசிரியர்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ஒன்றியத் தலைமை அமைச்சர் நரேந்திரத் தாமோதர தாசு மோதி அவர்களுக்கு, வணக்கம்.

1962ல் சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து, திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, ‘திராவிட நாடு கொள்கையைக் கைவிடுகிறோம். ஆனால் அதற்கானக் காரணங்கள் அப்படியே உள்ளன’ என்றார். மேலும், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்னும் முழக்கத்தை முன்வைத்து, மாநிலச் சுயாட்சிக்காக இனி நாங்கள் போராடுவோம்’ என்றார்.

நிலமை இன்னும் மாறல…

சரியாக 60 ஆண்டுகள் கடந்த நிலையில், அண்ணா முன்வைத்த ‘மாநிலச் சுயாட்சி’ கோரிக்கையை முன்வைத்து இன்றும் போராட வேண்டிய தேவையைத் தங்களின் தலைமையில் இயங்கிவரும் ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா என்பது ஒரு கூட்டாட்சி (திமீபீமீக்ஷீணீறீவீsனீ) நாடாகும். பல மாநிலங்களின் ஒன்றியம் (ஹிஸீவீஷீஸீ ஷீயீ stணீtமீs)  தான் இந்தியா. இந்தியாவை ஒரு துணைக் கண்டம் என்றே இந்திய அரசியல் சாசனம் குறிப்பிடுகின்றது. ஏனெனில், ஒவ்வொரு மாநில மக்களும் தனித்த தேசிய இனங்களாக, தங்களுக்கெனத் தனியாக மொழி, பண்பாடு, கலாச்சாரத்தைக் கொண்டு, ஒரு “நாடு” என்ற அமைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.

நிர்வாக வசதிக்காக இந்திய ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியல், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியல், இரண்டுக்கும் பொதுவான பட்டியல் (சிஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt றீவீst) என்று 3 வகையாக அதிகாரங்கள் அரசமைப்பின் 7ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையொப்பம் இடமறுக்கும் ஆளுநர்

நெருக்கடி நிலை காலத்தில்(1976ல்) கல்வி உள்ளிட்ட 5 துறைகள் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இப்போதும் வனம், மின்சாரம், தொழில் உள்ளிட்ட 52 துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. இத்துறைகள் குறித்து இருமாநில அரசுகளும் சேர்ந்து முடிவு செய்யலாம், சட்டம் இயற்றலாம் என்றுள்ளது. சட்டம் இயற்றினால், ஆளுநர் கையொப்பமிட்டுக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க மறுக்கிறார்.

முதிர்ச்சியின்மையை காட்டுது

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண்துறைத் தொடர்பாக, தங்களின் அரசு புதிய வேளாண் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக் காமல் நிறைவேற்றியது. வேளாண் பெருங்குடி மக்கள் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு ஓராண்டு காலம் போராடி, தங்களின் அரசைப் பணிய வைத்தார்கள். உங்கள் அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இந்நிகழ்வு தங்கள் அரசு மனமுதிர்ச்சியின்மையோடு உள்ளது என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஆளுநர் இன்றி எதுவும் எதுவுமில்லை…

ஜனநாயகத்தின் அடிப்படையான அதிகாரப் பகிர்வு என்பது நடைமுறையில் இல்லாமல், ஒன்றிய அரசிடமே அதிகாரங்கள் குவிந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாகவே இருந்தாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலும் அவர்களின் இசைவு பெற்றே செயல்பட வேண்டியுள்ளது. இது முழுமையான கூட்டாட்சி அல்ல.

7 பேர் விடுதலை என்னாச்சு…

தெளிவாகச் சொல்வதென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாக இருந்தாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட முடியும். குறிப்பாக முதலமைச்சர் இருக்க, ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் ஒப்புதலின்றி எதுவும் இங்கு நடைமுறைக்கு வராது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (ழிணிணிஜி) தேர்வை ரத்து செய்யக் கோரியும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநரின் ஒப்புதலின்மையால் அக்கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள், பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள மாநில ஆளுநரின் ஒப்புதலின்றி நடக்காது என்ற நிலை உள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மாநில அரசின் உரிமை பறிப்பு

காவிரி படுகைகளில் மீத்தேன் வாயு மற்றும் எண்ணெய் எடுப்பு போன்ற திட்டங்களுக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அனுமதி தேவையில்லை என்கிற நிலை உள்ளது. விவாதத்திற்குள்ளாகியுள்ள தேசியக் கல்விக் கொள்கை. கல்வித்துறை மட்டுமின்றிப் பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் வலிந்து திணிக்கப்படும் இந்தி உள்ளிட்டவை பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்படுவது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாக உள்ளன.

ஜிஎஸ்டி வருவாய் கொஞ்சமா தர்றாங்க…

நிஷிஜி வரி வருவாயில் தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய தொகை ரூ.17 ஆயிரம் கோடியை மத்திய அரசு தரவில்லை என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஒக்கி, கஜா, நிவர், புரேவி எனப் புயல் சேதத்திற்குக் கேட்டதைவிடச் சொற்ப அளவே நிவாரண நிதி கொடுத்து உதவுகின்றது ஒன்றிய அரசு.

மாநில உரிமையை பறிப்பதேன்..

மிக அண்மையில் தங்களின் அரசு இந்தியக் குடிமைப் பணியாளர்களை (மிகிஷி, மிறிஷி) மத்தியஅரசின் ஆலோசனையின்றி மாற்றம் செய்யச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துத் தங்களுக்கு எழுதியுள்ள மடலில், ‘மாநில உரிமைகளைப் பறிப்பதாக இந்த நடவடிக்கையுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மோசமானது மத்திய, மாநில அரசு உறவு

அண்மைக்காலமாகத் தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, ஆந்திரா,  தெலுங்கானா, டில்லி மாநிலங்களில் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர்களின் தலையீடு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. டில்லி மாநில அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் துணை நிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும்  அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின், அனைத்து அதிகாரங் களையும் மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ளது. நாட்டின் ஜனநாய கம், அரசியலமைப்புச் சட்டத்தின்மீது மத்திய அரசு தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு மத்திய, மாநில அரசுகளின் உறவு தற்போது மிகவும் மோசமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளதை எளிதில் கடந்து போக முடியாது.

ராஜமன்னார் அறிக்கை

அண்ணா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக இருந்த கலைஞர், மாநிலச் சுயாட்சி மாநாட்டை நடத்தினார். மாநிலச் சுயாட்சி குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையிலான குழு 1971ம் ஆண்டு மே 27ம் தேதி 380 பக்கப் பரிந்துரையை  அறிக்கையாகக் கொடுத்தது.

இதில், “அரசமைப்புச் சட்டத்தில் 7வது அட்ட வணையில் உள்ள அதிகாரங்களைத் திருத்தம் செய்யவேண்டும்.  மாநிலங்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் வேண்டும். மாநில அரசுகளிடம் கலந்தாலோசனை செய்த பிறகே ஆளுநர்களை நியமிக்க வேண்டும். நதிநீர்ப் பிரச்சினைகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். வரி வருவாய் மாநிலங்களுக்குக் கிடைக்க, சில வரிகளை மாநில அரசுகளே வசூலிக்க வேண்டும்…” என்பன உள்ளிட்டவை முக்கியமானவை. இந்த அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதிபதி ராஜமன்னார் குழு அறிக்கை அப்போதையப் பிரதமர் இந்திராகாந்தியிடமும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து  மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராயச் சர்க்காரியா குழுவும் அமைக்கப்பட்டது. நீதிபதி ராஜமன்னார் குழு பரிந்துரை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த சர்க்காரியா குழு விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது. ஆனாலும் மாநிலச் சுயாட்சி நீண்ட காலக் கோரிக்கையாகவே தொடர்கிறது.

மாநிலச் சுயாட்சி…

இது தமிழ்நாட்டின் குரல் மட்டுமல்ல… ஆந்திராவின் என்.டி.ராமராவ், கர்நாடகத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, காஷ்மீரின் பரூக் அப்துல்லா, அசாம், கேரளம், நாகலாந்து  எனப் பிற மாநிலங்களும் அவற்றின் முதலமைச்சர்களாக இருந்தவர்களும் மாநில உரிமைகள் குறித்து அவ்வப்போது பதிவு செய்துள்ளனர். தற்போது மராட்டிய மாநிலத்தை ஆண்டு வரும் சிவசேனா கட்சியின் முதல்வர் உத்தவ்தாக்கரே, “இந்தியா விரைவில் உடைந்து சிதறும் வாய்ப்பை மோதியின் அரசு அதிகாரக் குவிப்பின் மூலம் உருவாக்கி வருகின்றது”  என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானா நாடாளுமன்ற உறுப்பினர் முரளிமோகன், “ஒன்றிய அரசு அதிகாரக் குவிப்பைக் கைவிட வில்லை என்றால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா இவற்றை இணைத்து ‘திராவிட நாடு’ கேட்போம்..” (விடுதலை-12.3.2018) என்று கூறியுள்ளார்.  இந்நிலையில், ஒரே நாடு ஒரே ரேசன், ஒற்றை ஆட்சி, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்று சர்ச்சையான விடயங்கள் வேகமெடுத்து வரும் நிலையில், மாநிலச் சுயாட்சிக்கான குரல் மீண்டும் வலுவாகப் பெரும்பான்மை மாநிலங்களில் எழுந்துள்ளன.

கலகக்குரல் அல்ல… உரிமை முழக்கம்

மாநிலச் சுயாட்சி என்பது மாநில உரிமைக்கானது மட்டுமல்ல. இந்தியாவின் பல்வேறு மொழி, இன, கலாச்சார, பண்பாட்டு  அடையாளத்தைக் காப்ப தாகும். அதிகாரத்தைப் பரவலாக்கி, இந்தியாவை வலுவாக்கும் முயற்சியாகும். மாநிலச் சுயாட்சி என்னும் அதிகாரப்பரவல் கலகக் குரல் அல்ல. உரிமை முழக்கமாகும். நாட்டின் பன்முகத் தன்மையைக் காக்க, வளர்ச்சியை முன்னெடுக்க….மாநில சுயாட்சி என்பது காலத்தின் தேவையாகும் என்பதை உணர்ந்து ஒன்றியத் தலைமை அமைச்சராக உள்ள நீங்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(அடுத்த மடலில் சந்திப்போம்)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.