இறந்த பின் கிடைத்த பாராட்டுச் சான்றிதழ் !
உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய இல்லத்திற்கு நேரில் சென்று மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு.
கடந்த 6 ஆண்டுகளாக மேலாக உடல் உறுப்பு கொடை, உடல் கொடை வழங்கியவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல், நன்றி, பாராட்டுகள் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ், பயனாடை, டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நூல் மற்றும் சிலருக்கு உதவிகள் செய்து வருகிறோம்.

இதை தொடர்ந்து 18.11.25 புதுக்கோட்டை நகரத்தில் கடந்த (05.11.25 ) அன்று மூளைச்சாவு அடைந்த திருமதி. ஜோதி தொல்காப்பியன் அவர்களது சிறு நிரகங்கள், கல்லீரல், இதயம், இதய வால்வு, நுரையீரல் உறுப்புகளை கொடையாக வழங்கிய அவரது கணவர் திரு.தொல்காப்பியன், மகன்கள் கோவிந்தராஜ், முத்துக்குமார் ஆகியோரை புதுக்கோட்டை காமராஜ்புரம் பகுதியில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, ஆறுதலையும், நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துடன், நினைவாக மக்கள் சக்தி இயக்க சார்பில் உடல் பாராட்டுச் சான்றிதழ், பயனாடை, டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நூல் வழங்கியுடன்,”பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம்” என துணிப்பையை பயன்படுத்துகள் என துணிப்பையும் வழங்கி சிறப்பித்தோம்.
நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைச்செயலாளர்கள் ஆர்.இளங்கோ, வெ.இரா.சந்திரசேகர், புதுக்கோட்டை முருகேசன், கணேசன், அசோகன் காந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.