அங்குசம் பார்வையில் ‘அதர்ஸ்’
தயாரிப்பு : ‘கிராண்ட் பிக்சர்ஸ்’ & அப்-7 வென்ச்சர்ஸ்’. டைரக்ஷன் : அபின் ஹரிகரன். ஆர்ட்டிஸ்ட் : ஆதித்யா மாதவன், கெளரி ஜி.கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரிஷ் பெராடி, வினோத் சாகர், ஜெகன், மாலா பார்வதி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஒளிப்பதிவு : அரவிந்த் சிங், இசை : ஜிப்ரான், எடிட்டிங் : இ.ராமர், இணைத் தயாரிப்பு : ஆதிராஜ், பி.ஆர்.ஓ : சதீஷ் [ எய்ம் ]
நள்ளிரவு நேரம். சாலையில் ஒரு மெட்டடோர் வேன் விபத்துக்குள்ளாகி, பின்னர் வெடித்துச் சிதறுகிறது. அதில் மூன்று இளம் பெண்களும் ஒரு ஆணும் எரிந்து சாகிறார்கள். இந்த விபத்தை விசாரிக்க களம் இறங்கிய ஏ.சி. ஆதித்யா மாதவனுக்கும் லேடி இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியனுக்கும் இது விபத்து அல்ல, திட்டமிட்ட படுகொலை என தெரியவர, அதிர்ச்சியாகி, நூல் பிடித்தது போல விசாரணையக் கொண்டு போக மேலும் பலப்பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன.
அந்தக் கொலை ஏன் நடந்தது? யாரால் நடத்தப்பட்டது? வேனில் இருந்த இளம் பெண்கள் யார்? என்பதை செம விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் ஜானரில் இரண்டே கால் மணி நேரத்தில் கச்சிதமாக சொல்லியுள்ளார் டைரக்டர் அபின் ஹரிகரன்.

படத்தின் இடைவேளை வரை அந்த வேன் யாருடையது? அதன் டிரைவர் எப்படி எஸ்கேப்பானான்? என்பது குறித்து விசாரிக்கும் சீன்களே தொடர்ச்சியாக வருவதால் சற்றே அயற்சியை ஏற்படுத்துகிறது. இந்த அயற்சியைக் கூட ஆதித்யா மாதவன் -கெளரி கிஷன் ஜோடிக்கு லைட்டாக லவ் எபிசோட் வைத்து, அதில் கலர்ஃபுல்லாக டூயட்டும் வைத்து சமாளித்துவிட்டார் டைரக்டர்.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு தான் படம் சூப்பர் க்ரிப்பாக போவதற்கு ஸ்கிரிப்டில் அடுத்தடுத்து ட்விஸ்ட் வைத்து க்ளைமாக்ஸ் வரை செம த்ரில்லாங்க கொண்டு போகிறார் அபின் ஹரிகரன்.
செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் கிரிமனல்தனங்களைச் சொல்லி நம்மை பகீரடைய வைக்கிறது இந்த ‘அதர்ஸ்’. இந்த பகீர் தகவல்களுக்காக பல தரவுகளுடன் டீடெய்லாகவும் சொல்லி அதிர வைக்கிறார். என்ன ஒண்ணு மருத்துவம் சம்பந்தப்பட்ட விசயங்களை, பெரும்பாலும் ஆங்கில வசனம் மூலம் சொல்லியிருப்பது சாதாரண மக்களுக்கு புரியுமா என்பதும் சந்தேகம் தான். அந்த சீன்களில் முடிந்தளவு தமிழில் சப் டைட்டில் போட்டிருந்தால் வெகுஜனங்களுக்கு நன்றாக ரீச்சாகியிருக்கும்.
ஏசி மாதவனாக புதுமுக நாயகன் ஆதித்யா மாதவன் அந்த கேரக்டருக்கு கச்சிதமான தேர்வு தான். போலீஸ் அதிகாரிக்குரிய உருவம், உயரம், விசாரிக்கும் பாணி என சின்சியராக உழைத்துள்ளார் ஆதித்யா மாதவன். இவருக்கு சப்போர்ட்டாக வரும் இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியனும் செம மிடுக்கு. க்ளைமாக்ஸில் இறந்து பரிதாபத்தை அள்ளுகிறார்.
தனியார் கருத்தரிப்பு ஆஸ்பத்திரியின் டாக்டராக கெளரி கிஷன், செம செலக்ஷன். அந்த ஆஸ்பத்தியில் நடக்கும் திருட்டு வேலைகளைக் கண்டு பிடிக்க அவர் எடுக்கும் ரிஸ்க்கான ஆக்ஷன் செம விறுவிறுப்பு. ஆஸ்பத்திரியின் ஓனர் ஹரிஷ் பெராடியிடம் பேசும் போது அங்கே நிற்கும் வினோத்சாகரை வெளியே போகச் சொல்லும் சீனில் கெளரி கிஷனின் பெர்ஃபாமென்ஸ் செம ஹாட் என்றால், ஆதித்யா மாதவனுடன் செல்ல சிணுங்கல், ஊடல், கூடல் என அந்த ஏரியாவில் சூப்பர் ஜில்.
மூன்று பேரை வில்லன்களாக காட்டி, கடைசியில் இன்னொருவனை காரண காரியத்துடன் கச்சிதமாக மேட்ச் பண்ணி அதர்ஸ் என்ற டைட்டிலுக்கு ஃப்ளாஷ்பேக்கில் ஆர்.சுந்தர்ராஜன் மூலம் பொருத்தி அசத்திவிட்டார் டைரக்டர் அபின் ஹரிகரன்.
படத்தின் க்ரைம் த்ரில்லிங் எஃபெக்ட்டுக்கு ரொம்பவே சப்போர்ட்டாக இருப்பவர்கள் கேமராமேன் அரவிந்த்சிங், மியூசிக் டைரக்டர் ஜிப்ரான், எடிட்டர் ராமர் ஆகியோர் அடங்கிய மூவர் கூட்டணி தான்.
இந்த ‘அதர்ஸ்’ எல்லோருக்கும் எச்சரிக்கை…
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.