அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அவுட்டோர் கேட்டரிங் எனும் அட்டகாசமான வாய்ப்பு ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –25

திருச்சியில் அடகு நகையை விற்க

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்குப் பின்னர் என்னென்ன வேலைகளுக்கு செல்லலாம் என இதுவரை நாம் பார்த்தோம். உணவு சம்பந்தமான எந்த தொழில் செய்வதற்கும், முதலில் FSSAI எனப்படும் உணவுத்தரக் கட்டுப்பாடுச் சான்றிதழ் பெறுவது சட்டப்படி கட்டாயம் எனவும், அதனைப் பற்றிய தகவலையும் கடந்த இதழில் பார்த்தோம்.

இனிவரும் தொடர்களில் இந்தப்படிப்பின் மூலம் நாம் எவ்வாறு முதலாளி ஆகலாம்? என்னென்ன தொழில்கள் செய்யலாம் என பார்ப்போம்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஹோட்டல் தொழில்ODC – Out Door Catering எனப்படும் வியாபாரம் நாம் அனைவரும் நன்கு அறிந்ததாகும். எளிய நடையில் சொல்ல வேண்டுமானால், ஆர்டரின் பேரில் விசேஷங்களுக்கு உணவு தயாரித்து தரப்படும் என சொல்வார்களே, அதன் பெயர்தான் அவுட்டோர் கேட்டரிங். ஒரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட்டிற்கு செல்லாமல், வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்பவும், அவரின் இடத்திற்கு வந்தும் உணவு தயாரிப்பதும் பரிமாறுவதும் இது ஆகும். வியாபாரத்தின் இடத்தில் அல்லாமல் வெளியே, அவுட்டோர் இடங்களில் சேவை செய்வதால் இதற்கு, அவுட்டோர் கேட்டரிங் என்று பெயர்.

இந்த தொழில் செய்வதற்கும் FSSAI எனப்படும் உணவுத்தரக் கட்டுப்பாடுச் சான்றிதழ் பெறுவது சட்டப்படி கட்டாயம் ஆகும். அவுட்டோர் கேட்டரிங் செய்வதற்கு முதலாவதான முதலீடு, பல நபர்களின் தொடர்பு ஆகும். ஆம் அனைத்து சமையலுக்கும் நாம் முழு நேரமாக ஆட்களை வைக்க இயலாது. அதனால், தொடர்ந்து வரும் ஆர்டர்களுக்கு அல்லது நமது Fixed Menu விற்கு மட்டும் முழு நேர பணியாளர்களை அமர்த்திவிட்டு, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் சிறப்பு தேவைகளுக்கு தனித்திறன் கொண்டவர்களை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக மட்டுமல்லால், பரிமாறுவதற்கும் பார்ட் டைமாக வேலை செய்ய ஆட்களை எடுப்பதற்கும் Contacts அவசியம் ஆகும். இதோடு மட்டுமல்லாமல், ஆர்டர்கள் எடுக்கவும் தொடர்புகள் இருந்தால் நல்லது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

ஹோட்டல் தொழில்முறையான முதலீடு செய்து ஒரு கிட்சன் செட்-அப், பாத்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், ஸ்டோர் ஆகியவற்றை தேவையான சிறு அளவுக்கு வாங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் இந்த தொழிலை செய்யலாம். இவ்வாறு நாம் தொழில் துவங்கி நமது ஊரின் சுற்று வட்டாரத்தில் ஆர்டர் எடுத்து வியாபாரம் செய்யலாம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த அவுட்டோர் கேட்டரிங் தொழிலில் நாம் மெனு அமைப்பதில் மிகவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். பாரம்பரிய உணவு வகைகள், பன்னாட்டு உணவு வகைகள், புதிய முனைப்புகள் என நாம் எவ்வாறு நமது தொழிலில் கவனம் செலுத்த உள்ளோம் என முடிவு செய்ய வேண்டும்.

ஹோட்டல் தொழில்எந்த தொழிலுக்கும் வாடிக்கையாளரைப் பெறுவதற்கு நாம் விளம்பரம் அல்லது சந்தைப்படுத்துதல் அவசியம் ஆகும். அவுட்டோர் கேட்டரிங் தொழிலுக்கு நாம், சமூக வலைதள விளம்பரம், நமது தொடர்பில் உள்ள வாட்ஸ்-ஆப் விளம்பரம் ஆகியவற்றின் மூலமே வியாபாரம் துவங்கலாம். மேலும், நமது பகுதிகளில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், சங்கங்கள், இல்லங்கள் ஆகியவர்களை அணுகலாம்.

எவ்வளவு தூரம் வரை நமது உணவினை கொண்டு செல்லலாம் என முடிவு செய்து அப்பகுதிகளில் நாம் வியாபார விளம்பரம் மற்றும் அணுகுமுறையை கையாளலாம்.

சுத்தம், சுவை, சுகாதாரம் ஆகியவற்றுடன் செய்து பரிமாறப்படும் அவுட்டோர் கேட்டரிங் நிபுணர்களுக்கு நல்லதொரு வரவேற்பு உள்ளது.  இது போன்று இன்னும் பல்வேறு தொழில் குறித்து தொடர்ந்து வரும் தொடர்களில் காண்போம்.

தொடரும் …

கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.