மேம்பாலம் திறப்பு விழாவை புறக்கணித்த மதுரை மேயர் ….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை மேயரின் கணவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மூர்த்தி நிகழ்ச்சிக்கு வந்ததால் புறக்கணிப்பா.? என திமுகவினர் கேள்வி….

மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்க ரயில்வே கேட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கியது. தமிழக நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிக்கு 33 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

Sri Kumaran Mini HAll Trichy

பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து டிவிஎஸ் நகர் ஜெயந்த்புரம் இடையே 1082 மீட்டர் நீளமும்., டிவிஎஸ் நகர் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் தலா 8.50 மீட்டர் அகலமும் பழங்காநத்தம் 12 மீட்டர் அகலத்தில் “Y” வடிவில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

மதுரை மேம்பாலம் திறப்புபழங்காநத்தம்-டிவிஎஸ் நகர் இடையே பாலம் கட்டுப்பணி விரைவாக முடிக்கப்பட்டது. ஆனால்., ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட இத்திட்டமானது, அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கான செலவுகள் அதிகரித்ததால் நெடுஞ்சாலைத் துறை தரப்பில் மறு மதிப்பீடு செய்யப்பட்டு 66 கோடி வரை தேவைப்படு என தெரியவந்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு மேம்பால பணிகள் வேகம் வேகமாக கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து., மேம்பாலத்தின் கீழ் 600 மீட்டர் தூரமுள்ள அணுகு சாலையை சீரமைப்பது., வண்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று மேம்பால பணிகள் முழுமையாக விரைவாக கட்டி முடிக்கப்பட்டது.

Flats in Trichy for Sale

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இன்று காணொளி காட்சி வாயிலாக பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். இந்நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் மதுரை மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்., கவுன்சிலர்கள்., அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், மேயர் இந்திராணி மட்டும் நிகழ்ச்சியை புறக்கணித்தார்.

மதுரை மேம்பாலம் திறப்புஇது குறித்து மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலரிடம் கேட்டபோது…

மேயர் தனது உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாகவே சென்று விட்டார். அதனால் அவர் வர இயலவில்லை என தெரிவித்தார்.

ஜூன் 1ஆம் தேதி மதுரைக்கு  வருகை தரும் முதல்வரை வரவேற்க, பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறித்தும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் மும்முரமாக வேலை செய்து வரும் நிலையில் சொந்த விடுப்பில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சிக்கு சென்ற அவர் முதல்வர் திறந்து வைத்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.