பச்சமலை கொலை வழக்கில் இறந்தவரின் நண்பர்கள் கைது !
துறையூர் பச்சமலை கொலை வழக்கில் திடீர் திருப்பம் ! இறந்தவரின் நண்பர்கள் அதிரடி கைது!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சைமலை கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட தாலூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது விவசாய தோட்டத்தில் பாதி அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து பிணத்தை கைப்பற்றி துறையூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் துறையூர் பெருமாள் மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கீரம்பூர் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கணாமல் போய்விட்டார்.
இது பற்றி கார்த்தியின் நண்பர் விஜய் என்பவரிடம் வினோத் மற்றும் கார்த்தியின் அண்ணன் நந்தகுமார் ஆகிய இரண்டு பேரும் சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது மூவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயை நண்பர்கள் வினோத் மற்றும் நந்தகுமார் ஆகியோர் பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே இறந்து போன விஜயின் உடலை தங்களது இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு பச்சைமலைக்கு கொண்டு சென்று தாலூர் கிராமத்தில் உள்ள ஜெயராமன் என்பவரது முந்திரி தோட்டத்தில் புதைத்து விட்டதாக வாக்கு இதனை தொடர்ந்து நந்தகுமார் வினோத் இருவரையும் போலீசார் கைது செய்தனர். காணாமல் போன நண்பரை தேடிச்சென்று சக நண்பரை கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருமாள் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தகார்த்தி அஜித் விஜய் மூவரும் நண்பர்கள்.இதில் கார்த்தி என்பவர் வினோத் என்ற நபரிடம்அவரது பன்றி பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த 20 ஆம் தேதி கார்த்தி அஜித் விஜய் ஆகியோர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சென்றதை வினோத் பார்த்துள்ளார்.
திரும்பி வந்தபோது இருவர் மட்டுமே திரும்பியுள்ளனர். அதில் கார்த்திக்கை காணவில்லை. இதில்மூவரில் ஒருவரான அஜித்தை விசாரிக்கையில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறவே.விஜய்யிடம் காணாமல் போன கார்த்தி எங்கே என கார்த்தியின் அண்ணன் நந்தகுமார் மற்றும் வினோத் ஆகியோர் விஜய் இடம் கடந்த 20ஆம் தேதி இரவு பெருமாள் மலை அடிவாரப் பகுதியில் வைத்து விசாரிக்கின்றனர்.
அப்பொழுது முன்னுக்குபின் முரணாக விஜய் பதில் கூறவே இதில் ஆத்திரமடைந்த வினோத் கட்டையால் விஜயின் தலையில் அடிக்கவே பலத்த காயமுற்ற நிலையில் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். பதறிப்போன இருவரும் விஜய்யிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததால் மேலும் பார்த்த பொழுது இறந்துவிட்டது தெரிந்ததும், நந்தகுமாரின் சொந்த ஊரான பச்சைமலை தாளூர் பகுதியில் சென்று அங்கு புதைத்து விட்டால் யாருக்கும் சந்தேகம் வராது என வினோத்திடம் கூறவே அதன்படி அங்கிருந்து உடனடியாக வினோத் தனது இருசக்கர வாகனத்தில் நந்தகுமாரை அழைத்துக் கொண்டு இறந்து போன விஜயின் உடலை இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் நடுவில் உட்கார்ந்த நிலையில் வைத்து பச்சை மலைப் பகுதியில் தாளூர் என்ற கிராமத்தில் சென்று உடலை புதைத்துள்ளான்.
மேலும்காணாமல் போன கார்த்தியை போலீசார் தேடி வந்த நிலையில் பச்சமலை பகுதியில் குழியில் புதைக்கப்பட்ட ஆன்சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வர அந்த இடம் நந்தகுமாரின் உறவினருக்கு சொந்தமான தோட்டம் என்பது தெரிய வர போலீசார் காணாமல் போன கார்த்தியின் அண்ணனான நந்தகுமாரிடம் விசாரித்த நிலையில் போலீசாரின் விசாரணையால் நாம் எப்படியும் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்த வினோத்,நேரடியாக நேற்று மாலை துறையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தான்.
வினோத்திடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் கார்த்தியின் அண்ணனான நந்தகுமாரையும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் . மேலும் காணாமல் போன கார்த்தி எங்கே இருக்கிறார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் பச்சை மலைக்கு செல்லும் சோதனைச் சாவடிகளில் உள்ள வன காவலர்கள் உரிய சோதனை மேற்கொள்ளாததால் இது போன்ற குற்ற சம்பவங்கள் பச்சை மலையில் நடப்பதாகவும் சோதனை சாவடியில் உள்ள வன அலுவலர்கள் முறையாக பரிசோதித்த பின் மலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என பச்சைமலை சார்ந்த கிராம பழங்குடியின மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..
– ஜோஸ்