அங்குசம் சேனலில் இணைய

எல்லாமே மக்களுக்கு தான் – பாலம் கல்யாண சுந்தரம். (14)

முனைவர் ஜா.சலேத் - கண்ணெதிரே போதிமரங்கள்! ( அறியவேண்டிய ஆளுமைகள் )

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“தன்னலம் இல்லாமல் வாழ்வதே சிறப்பான பெரு வாழ்வாகும். இறைவன் அந்த அரும் பெரும் வாழ்வை இவருக்குக் கொடுத்து இருக்கிறார். அதனால் பலர் அவர் நிழலில் நல்ல நிலையில் சிறப்படைகிறார்கள். இவர் நீண்டகாலம் நலமுடன் வாழ வேண்டும்!” என்று இவரை வாழ்த்தினார் மேனாள் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெஅப்துல் கலாம்.

“நெல்சன் மண்டேலா போன்ற ஆளுமைகளும், ஐரோப்பிய அமெரிக்க பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும்  இவரைபட பாராட்டியுள்ளனர். அதுதான் நமக்குப் பெருமை” என்றார் மேனாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

“ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இவருக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், “எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பாதான் இல்லை. ஆகவே, இவரை என் தந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறேன். நம்மோடு வாழும் இவர் ஒரு மகான் !” என்றார் .

'பாலம்' கல்யாண சுந்தரம்.
‘பாலம்’ கல்யாண சுந்தரம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தன் இந்தியப் பயணத்தின்போது, அரசு சாராத இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் நமது பேரன்பிற்குரிய டாக்டர் அப்துல்கலாம்; மற்றொருவர்  ‘பாலம்’ கல்யாண சுந்தரம்.

இப்படி ஆளுமைகள் போற்றும் அந்த ஆளுமை யார் என்ற உங்களின் வினா எனக்கும் கேட்கிறது. அவர்தான் பாலம் கல்யாண சுந்தரம்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, கலக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட தமிழகத்தின் ஒரு கடைக்கோடி குக்கிராமமான மேலக்கருவேலங்குளம் என்ற ஊரே இவரது சொந்த ஊர். எனினும் எல்லா ஊரையும் தம் சொந்த ஊராகக்கருதி, தம் இதயத்தை விசாலப்படுத்தியது இவரது மக்கள் மீதான ஈர்ப்பு.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கலைக்கல்லூரியில் 30 ஆண்டுகாலம் நூலகராகப் பணியாற்றி, மாணவர்களுடனும் புத்தகங்களுடனும் தம் பொருளுள்ள வாழ்வை வாழ்ந்தவர். வசதிகள் நிறைந்த ஓர் குடும்பத்தில் பிறந்தவன் இவருக்கு இவர் அம்மா தான் உலகம். வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் எப்போதும் பணத்தின்மீது ஆசைக்கொள்ளாமல் மற்ற உயிர்களுக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்று இவருக்குச் சொல்லப்பட்ட அறவுரையே இவரின் வாழ்க்கை திசைகாட்டியாக அமைந்தது. சிறுவயதில் கைசெலவுக்காக அம்மா கொடுக்கும் காசை சேர்த்து வைத்து உடன் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யத் தொடங்கிய இவரின் பழக்கம் வாழ்க்கைக்கான வழக்கமானது.

'பாலம்' கல்யாண சுந்தரம்.
‘பாலம்’ கல்யாண சுந்தரம்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது இந்திய சீனப்போரின் நடைபெறத் தொடங்கியது. வானொலியில் நேருவின் பேச்சைக்கேட்டு தேசியப் பாதுகாப்பு நிதிக்காக பத்துப்பவுன் தங்கச் சங்கிலியை பெருந்தலைவர் காமராசரைச் சந்தித்து வழங்கியுள்ளார்.

ஒரு நேர்காணலில் இந்த நிகழ்வு பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். “1963ல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் பிரதமர் நேரு நாட்டு மக்களிடம் தங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்யுமாறு கேட்டிருந்தார். நான் என்னுடைய பத்து சவரன் தங்க சங்கிலியை போர்கால நிதியுதவியாக அளிக்க சென்றேன். அங்கே இருந்த அதிகாரிகள் என்னை பாராட்டியதுடன்  பத்திரிகையாளர்களிடமும்  இதை தெரிவிக்குமாறு கூறி அனுப்பிவைத்தனர். அப்படி நான் சந்திக்க சென்ற ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில், `நீங்கள் அளித்திருக்கும் நிதி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இது உங்களுடைய குடும்ப சொத்தாகத் தெரிகிறது. நீங்கள் சுயமாக சம்பாதித்து ஏதாவது உதவி செய்திருக்கிறீர்களா? என்று வினா எழுப்பினர். அந்த வினா என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அதற்கு பின்னர்தான் வாழ்நாளில் சம்பாதிக்கும் பணம் முழுவதும் ஏழைகளுக்காக கொடுக்க வேண்டுமென்று முடிவெடுக்க வைத்தது,” என்கிறார்.

'பாலம்' கல்யாண சுந்தரம்.
‘பாலம்’ கல்யாண சுந்தரம்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

‘ஐம்பது லட்சம் மதிப்பிலான தன்னுடைய பூர்வீகச்சொத்துகள், வாழ்நாள் முழுவதும் தாம்  கல்லூரியில் பணியாற்றி சம்பாதித்த முப்பது லட்சம் ரூபாய் பணம், பணி ஓய்விற்கு பின் கிடைத்த பணிக் கொடை என தன் வாழ்நாளில் தனக்கு கிடைத்த அத்தனை பணத்தையும் ஏழைகளுக்காக அளித்தவர் பாலம் கல்யாணசுந்தரம்’ என பாலம் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு ‘பாலம்’ என்ற அமைப்பை நிறுவி தற்போது வரை நடத்தி வருகிறார். மக்களுக்காக உதவி செய்ய நினைப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த அமைப்பிற்கு பலரும் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

அமெரிக்காவில் ‘ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்’ (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.30 கோடியைப் பரிசாகப் பெற்றார். அந்தத் தொகை முழுவதையுமே குழந்தைகள் நலனுக்காக அளித்து, விருது வழங்கியவர்களையே வியப்படையச் செய்தார்.

’A Most Notable intellectual’ in the World’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிய கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகம், நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

“எல்லாவற்றையும் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கே கொடுத்து இருக்கிறீர்களே தாத்தா, உங்கள் சொந்தச் செலவுக்கு என்னதான் செய்வீர்கள்?” என ஒரு இளம் பத்திரிகையாளர் துடுக்காக கேள்வி கேட்டபோது அவர் சொன்ன பதில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல. கண் கலங்கவும் வைத்த்து. திடீரென எனக்கென ஏதாவது செலவு வந்துவிடும். எந்த காசும் இருக்காது. ஏதாவது ஓட்டலில் போய் வேலை செய்வேன். அவர்கள் தரும் காசு அந்தச் செலவுக்குப் போதுமானதாக இருக்கும்” என்பதே அந்தப்பதில்.

'பாலம்' கல்யாண சுந்தரம்.
‘பாலம்’ கல்யாண சுந்தரம்.

மக்கள் சேவை செய்வதற்கு திருமணம் தடையாக இருக்கும் என்று நினைத்த இவர், திருமணம் செய்து கொள்ளவில்லை.  தனக்கு வரும் ஓய்வூதியப் பணத்தில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என்.நகர் திட்டப் பகுதியில்குடியிருப்பு ஒன்று ஒதுக்கப்பட்டு, இதற்கான பயனாளி பங்குத்தொகையையும் அரசே ஏற்றுக் கொண்டு, குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவரிடம் வழங்கிச் சிறப்பித்தார்.

இவருடைய சுயசரிதை தற்போது திரைப்படமாக எடுக்கப்படும். ஹிந்தியில் அமிதாப்பச்சனும், தமிழில் ரஜினிகாந்தும் நடிக்கவ இருக்கிறார்கள்  என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்திற்காக தனக்கு அளிக்கபடவிருக்கும் ராயல்டி தொகையையும் மக்களுக்குதான் அளிக்கப்போகிறேன் என ஏற்கனவே பாலம் கல்யாணசுந்தரம் அறிவித்துவிட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்

முனைவர் ஜா.சலேத்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித்  தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்

கண்ணெதிரே போதிமரங்கள் –முந்தைய தொடர்கள் படிக்க 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.