பாலாற்று பெருவெள்ளத்தில் உயிரிழந்தோறுக்கு நினைவஞ்சலி செலுத்தி பாலாறு கூட்டியக்கத்தினர்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நூறாண்டுகளுக்கு முன் காவிரியை காட்டிலும் கரைப்புரண்டோடிய பாலாறு இன்றைய மழைக்காலங்களில் கருப்பு நிறத்தில் ஓடுகிறது , ஆக்ரமிப்பு காரர்களால் பாலாற்றின் அகலம் சுருங்கி , வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பகுதிகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரும், வேலூர் ராணிப்பேட்டை உட்பட பல நகரங்களின் சாக்கடை நீர் ஓடும் ஆறாக இந்த பாலாறு மாறிவிட்டது

அப்படிப்பட்ட ஜீவ நதியாக இருந்த பாலாற்றில் சரியாக 121 வருடங்களுக்கு முன்னர் பெய்த பெரும் மழையால் பாலாற்றில் திரண்டுவந்த நீரில் வாணியம்பாடி ஊரே அடித்துச் சென்றதில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்து போயினர்.

உலக சக்கரை நோய் தினம்

கர்நாடாகா மாநிலம், கோலார் நந்திமலையில் பாலாறு உற்பத்தியாகி 348 கிலோமீட்டர் தூரம் கடந்து செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது

பாலாற்றில் 1884, 1898-ம் ஆண்டில் பெரு வெள்ளம் ஏற்பட்டாலும், வரலாற்றில் துயரமான சம்பவம் 1903-ம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த ஆண்டின் அப்போதைய வாணியம்பாடி ஊரின் மக்கள் தொகை 15,800 என்பது ஆங்கிலேயர்களின் கணக்கு. அந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி அதிகாலை, விடாமல் பெய்துகொண்டிருந்தது மழை. பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதியான கர்நாடக சிக்பெல்லாபூர், கோலார் மாவட்டத்தில் ஒரேயடியாய் கொட்டித்தீர்த்தது பெரும் மழை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கர்நாடகாவின் மிகப்பெரிய பேத்தமங்கலா ஏரியின் பலமிக்க கரைகள் கன மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்தன. கட்டுப்படுத்த முடியாத வேகத்துடன் தமிழகத்துக்குள் நுழைந்து கொடையாஞ்சி கிராமம் அருகே திடுமென வாணியம்பாடி நகரத்தை சுற்றிவளைத்தது வெள்ளம். வீட்டில் தூங்கியவர்கள் அப்படியே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரே இரவில் வீடுகளையும், உறவுகளையும், வாழ்வாதாரத்தையும் மக்கள் இழந்தனர். வாணியம்பாடி பெரு வெள்ளத்தில் 200 பேர் மட்டுமே இறந்ததாக 1903-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த ” தி கால் “நாளிதழ்கள் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது

அந்த செய்தியில், ‘இந்திய வைஸ்ராய் கர்சன் பிரபுவிடம் இருந்து அவசர தந்தி லண்டனுக்கு சென்றுள்ளது. மெட்ராஸில் இருந்து கிடைத்த தகவல்படி, அன்றைய சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட இந்த பாலாற்றில் நவம்பர் 12-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடியின் பாதி நகரம் அழிந்தது. 200 பேர் இறந்தனர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்றும் வாணியம்பாடி நகரில் பார்க்க முடியும். கொடையாஞ்சி பயணயில் பிரிந்து வாணியம்பாடி நகரத்தை மூன்றாக பிரித்து ஓடும் பாலாறு, மீண்டும் வளையாம்பட்டில் இணைந்து செல்கிறது. பெருவெள்ளத்தின் சாட்சியாக வாணியம்பாடி சந்தை மேட்டில் ஆங்கிலேயர்கள் வைத்துள்ள நினைவுத்தூண், முன்பு ஆண்டு தோறும் நவம்பர் 12-ம் தேதி பெருவெள்ளத்தில் உயிரிழந்தோறுக்கு நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதன்படி, வாணியம்பாடி பெரு வெள்ளத்தின் 121-வது ஆண்டு தினத்தையொட்டி நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரு வெள்ளத்தில் உயிரிழந்த பொது மக்கள் மற்றும் பாலாறு உரிமை போராளிகளான எம்.எம்.பஷீர் அஹ்மது, நடராஜன், விவசாய சங்கத் தலைவர் தனபால், மற்றும் பாலாறு ஏ.சி.வெங்கடேசன் உள்ளிட்டோரின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த துயரம் குறித்து பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வடிவேல் சுப்ரமணியத்திடம் பேசினோம்,

angusam.com – 13

வாணியம்பாடியில் மூன்று பாலாறு ஓடுது. ஒன்று பிரதான பாலாறு, இரண்டு கல்லாறு, மூண்றாவதாக சின்னப் பாலாறு. இந்த மூணும் சேர்ந்து ஆம்பூருக்கு முன்னாடி ஒரே பாலாறாக மாறும் , இப்பவும் மழை வரும்போது மூன்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து போகும். இதுல வாணியம்பாடி நகரில் உள்ள கச்சேரி சாலை ஒட்டியே சின்ன பாலாறு போகுது. சின்ன பாலாறுல வந்த வெள்ளம்தான் அன்று இந்த பெரும் துயரத்துக்கு காரணம் , அந்த வெள்ளம் வாணியம்பாடி நகரை கிழக்கு மேற்குல இணைக்கிற செங்கல் கட்டுமானப் பாலத்தையும் அடிச்சிட்டு போன. அதன் எச்சங்களின் ஒருபகுதி இப்பவும் இருக்கிறது

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படும் அந்த பெரு வெள்ளத்திற்கு பிறகு , ஒரு இரும்புப் பாலத்தை ஆங்கிலேயர்கள் 1914- ல் உருவாக்கி தங்கள் படைகளை, தளவாடங்களை கொண்டு போக அமைச்சிருக்காங்க. இதுவும் 1996-ல் அடைமழை வந்தப்ப இடிஞ்சு விழுந்திடுச்சு. 2000-க்குப் பிறகு புதிய பாலம் தமிழ்நாடு அரசு கட்டியது இதனையோட்டிதான் அந்த நினைவு தூண் உள்ளது

இந்த தூயரசம்பவம் நடந்த இடத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு ஆண்டு தோறும் அஞ்சலி கூட்டம் நடத்துறோம். மீண்டும் என்றாவது ஒருநாள் பெருவெள்ளம் வரலாம். அதனால, கவனமா சொல்ல வருகிறோம் ஏன்னா, கடந்த காலங்களில் கேதர்நாத், பத்ரிநாத், காஷ்மீர் போன்ற இடங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கு. அங்கெல்லாம் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வந்திருக்கிறது

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதே 1903-ம் ஆண்டு நவம்பர் 12-ம்தேதியில் சென்னையிலும் பெருவெள்ளம் வந்திருக்கு. அந்த வெள்ளத்துல பக்கிங்ஹாம் கால்வாய் நிறைஞ்சு சென்ட்ரல் ஸ்டேஷன்ல வெள்ளம் புகுந்திருக்கு. அதனால, வாணியம்பாடி மக்கள் எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கணும்னும் அடுத்ததாக ஆற்றை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, ஆற்றில் , கழிவுகளைப் கொட்டக்கூடாது, ஆற்று தண்ணீரை மாசுபடுத்தக்கூடாது. ஆற்றில் வளரும் செடிகொடிகளை அகற்றி பாலாற்றை பாழ்படாமல் பாதுகாக்கணும்னு இதன்மூலம் வலியுறுத்துறோம் என்கிறார்

நிகழ்வில் தலைமை தாங்கிய சமூக ஆர்வலர் அம்பலூர் அசோகன் கூறியதாவது

தமிழ்நாட்டில் மட்டுமே சமதளத்தில் பாலாறு பரந்து விரிகிறது. இங்கு தொடங்கி செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் வரை 222 கி.மீ தூரம் பயணிக்கிறது. கோடை காலத்திலும் ஆற்றில் வெள்ளம் வராவிட்டாலும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு உரிய ஜீவநதியாக இருந்துள்ளது.

பாலாறு கூட்டியக்கத்தினர்
பாலாறு கூட்டியக்கத்தினர்

ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்ததால் என்னவோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு அடுத்த நெல் உற்பத்தி செய்த மாவட்டம் என்ற பெருமை அப்போதைய சேலம் மாவட்டத்திற்கு (வடாற்காடு வேலூர், தென்னாற்காடு திருவண்ணாமலை) உண்டு. பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஊற்றுக் கால்வாய் இருந்தது. ஆற்றின் கரையில் வெட்டினாலே ஏற்படும் ஊற்று நீரிலே விவசாயம் செழித்திருக்கிறது.

பாலாற்றில் வெள்ளம் வந்தால் இதன் அருகிலுள்ள ஏரிகள் பாசன வசதி பெறும். மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடும் பாலாற்றின் இரண்டு கரைகளான வடக்கு மற்றும் தெற்கில் மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீர் ஓடைகளாய் பாலாறு வந்தடையும்.

பாலாற்றின் வளத்துக்கு அதன் கிளை நதிகளான பத்தலப்பல்லியில் இருந்து ஓடிவரும் மலட்டாறு, ஒடுகத்தூர் அருகே உருவாகும் அகரம் ஆறு. கவுன்டன்யா நதி, கொல்லப்பல்லி கொட்டாறு, பேயாறு மலை கானாறு, நீவா எனப்படும் பொன்னை ஆறு, ராஜாதோப்பு கானாறு என திருப்பத்தூர் வேலூர் மாவட்டங்களில் ஓடும் இந்த ஆறுகள் ஒன்றினைந்து பாலாற்றுக்கு பலம் சேர்க்கின்றன.

இதன் காரணமாகவே விவசாயம் செழித்த வேலூர் மாவட்டம், மணல் திருடுகளாலும் ரசாயனம் மற்றும் தோல் கழிவால் நிலத்தடி நீரையும் மண் வளத்தையும் வேகமாக பாதித்தது. தஞ்சைக்கு நிகரான நெல் உற்பத்தியும் குறைந்தது , 2005-ம் ஆண்டு கணக்குப்படி 52 ஆயிரம் ஹெக்டராக இருந்த விவசாய நிலங்கள் 2012-ம் ஆண்டில் 37 ஆயிரம் ஹெக்டராக சுருங்கிவிட்டது , சொந்த வயல்வெளியில் விவசாயம் பார்த்த மக்கள் நீராதாரம் குறைந்து போனதால் , தோல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் அடிமைகளாக வேலை செய்து அவர்களுடைய விலை நிலங்களை அழித்து வருவது வேதனை அளிக்கிறது

வேலூர் மாவட்டத்தில் 60 கி.மீ. தொலைவுக்கு ஒரு சர்க்கரை ஆலை வீதம் 3 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரித்த விவசாயிகள், சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றுமதி செய்தனர். பணப்பயிராக இருந்த கரும்பை இன்று பயிரிடுவதை பெரும்பாலான விவசாயிகள் நிறுத்திவிட்டார்கள். கரும்பு அறுவடை செய்தால் ஏற்படும் நஷ்டத்தைவிட தீயிட்டு அழிப்பதை லாபமாக நினைக்கின்றனர். மாவட்டத்தில் இருக்கும் 3 சர்க்கரை ஆலைகள் முழு அறவைத் திறனை எட்ட முடியாமல் பக்கத்து மாவட்ட விவசாயிகளை நம்பியிருக்கிறது

ஒவ்வொரு ரக நெல்லும் ஒரு சுவை அப்படி புகழ்பெற்ற நெல் ரகங்களில் ஒன்று ஆற்காடு கிச்சிலி சம்பா. ஆற்காடு நவாப்புகளால் போற்றப்பட்ட இந்த நெல் ரகம் பயிரிடுவது இன்று அரிதாகிவிட்டது. ஜீரண சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமுள்ள ஆற்காடு கிச்சிலி சம்பா பயிர் குறைந்ததற்கு வறண்டு போன பாலாறும் ஒரு காரணம். என்றார்

இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள், பாலாற்றில் வெள்ளம் ஏற்படாது என்று கருதி ஆற்றை குப்பை மேடாக்கி நீரோட்டத்தை தடுக்கின்றனர். ஆற்றை மாசுப்படுத்துவதும் நீரோட்டத்தின் போக்கை தடுக்கும் வகையிலும் இயங்கும் நிறுவனங்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லையென்றால், சாது மிரண்டால், காடு கொள்ளாது என்கிற ரீதியில் மற்றொரு வெள்ளத்தை வாணியம்பாடி நகரம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்று பலரும் எச்சரித்தனர்

– மணிகண்டன்.

 

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.