அங்குசம் பார்வையில் ‘ பாம்பாட்டம்’ படம் எப்படி இருக்கு !

0

அங்குசம் பார்வையில் ‘ பாம்பாட்டம்’ தயாரிப்பு: வி.பழனிவேல்.‌இணைத் தயாரிப்பு: பண்ணை ஏ.இளங்கோவன். டைரக்டர்: வி.சி.வடிவுடையான். ஆர்ட்டிஸ்ட்ஸ்: ஜீவன், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், சாய் பிரியா, சுமன், யாஷிகா ஆனந்த், பருத்தி வீரன் சரவணன், சலீல் அங்கோலா, ரமேஷ் கண்ணா. டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: இனியன் ஜே.ஹாரிஸ், இசை: அம்ரிஷ், எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ், ஸ்டண்ட் மாஸ்டர்: சூப்பர் சுப்பராயன், டான்ஸ் மாஸ்டர்: அசோக் ராஜா. பிஆர்ஓ: மணவை புவன்.

Pambattam
Pambattam

ராணி மங்கம்மா தேவியின்( மல்லிகா ஷெராவத்) ஆட்சிக் காலம். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ராணி மங்கம்மா வுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த நேரத்தில் அரண்மனைக்கு வரும் ஜோசியன், நாக பவுர்ணமி அன்று நாகம் தீண்டி மங்கம்மா மரணம் அடைவார் என ச் சொல்கிறான். ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாத மங்கம்மா கோபமாகிஜோசியனை பாதாள சிறையில் அடைத்து விடுகிறார். மக்கள் முன் தோன்றி, ஜோசியன் சொன்னதைப் பொய்யாக்க வேண்டும் என்று சொல்லி நாகர் படையை அமைத்து நாட்டில் உள்ள நாகப்பாம்புகளையெல்லாம் எரித்துக் கொல்லச் சொல்கிறார்.

நாகர் படையும் களத்தில் இறங்குகிறது. நாகப்பாம்புகளை அழிக்கிறது. அதையும் மீறி ஒரு பெரிய நாகம் மங்கம்மாவைத் தீண்டி விட, மண்டையைப் போடுகிறார் மங்கம்மா.‌ஜோசியன் சொன்ன மாதிரியே நடந்துவிட்டதால் கலங்கிய மன்னன், ஜோசியனிடமே பரிகாரம் கேட்கிறான். குழந்தைகளுக்கு நாகம்மா என பெயர் வைத்து நாட்டைவிட்டே கிளம்பச் சொல்கிறான் ஜோசியன். மன்னரும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நியூசிலாந்து நாட்டுக்குப் போய்விடுகிறார். அதன் பின் பல ஆண்டுகள் ஓடுகின்றன.ஆனாலும் அந்த அரண்மனையில் மங்கம்மாவின் ஆவி சுற்றுவதாகவும் மிகப்பெரிய நாகம் இருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

இதை வைத்து சிலர் ஆடும் லேட்டஸ்ட் கபட ஆட்டம் தான் இந்த ‘ பாம்பாட்டம்’. இந்தப் படம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இப்ப தான் ஒரு வழியாக ரிலீஸ் ஆகிருக்கு. அப்பா மாணிக்கவேல், மகன் சரவணன் என இரட்டை வேடத்தில் ஜீவன். நல்லா வரவேண்டிய நடிகன் தான் ஜீவன் என நாம் நினைக்கும் அளவுக்கு இந்தப் படத்திலும் பல சீன்களில் பத்து வருடங்களுக்கு முன் இருந்த அதே தெனாவட்டு ஜீவனைப் பார்க்க முடியும். என்ன செய்வது, அவரவர் பழக்கம் வழக்கம், வாழ்க்கையை பாழ்படுத்தும் என்பது ஜீவனுக்குத் தான் பொருந்தும். வரும் நான்கைந்து சீன்களிலெல்லாம் உறுமுகிறார் கர்ஜிக்கிறார் மல்லிகா ஷெராவத். ரித்திகா சென்னும் சாய் பிரியாவும் ( இளவரசி நாகம்மா) முடிந்த மட்டிலும் நடித்து சிறப்பித்தி ருக்கிறார்கள் .

Pambattam
Pambattam

எந்த வடிவத்திலும் அடங்காத வடிவுடையானின் திரைக்கதை அப்படி இருந்தால் அதில் நடிப்பவர்கள் தான் என்ன செய்ய முடியும்? போதாக்குறைக்கு அரை மெண்டல் போலீசாக வந்து வில்லத்தனம் செய்து நம்மை டார்ச்சர் பண்ணிவிட்டார் டைரக்டர் வடிவுடையான். படத்தில் கொஞ்சமாவது திகில் எஃபெக்ட் இருக்குன்னா அதுக்கு மியூசிக் டைரக்டர் அம்ரிஷ் தான் காரணம். பல சீன்களில் காது ஜவ்வு கிழிஞ்சு ரத்தம் வரும் அளவுக்கு பேக் ரவுண்ட் ஸ்கோரும் இருக்கத் தான் செய்யுது. மொத்தத்தில் இந்த ‘பாம்பாட்டம்’ ரொம்ப சுமார் ஆட்டம் தான்.

– மதுரை மாறன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.