அங்குசம் சேனலில் இணைய

தற்கொலை செய்ய தூண்டும் ”பாரானியா” ( PARANOIA) ! – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாரானியா ( PARANOIA) என்பது அதீத சந்தேக நோய்

நெருங்கிய சொந்தங்களே தனக்கு தீங்கு இளைக்க இருப்பதாக சந்தேகிக்கும் அளவு ஏற்படும் மனநோய் ஆகும். சில நேரங்களில் அரிதாக நார்மலாக இருப்பவர்களுக்கும் இத்தகைய சந்தேகம் வந்து சிறிது காலத்தில் சரியாகலாம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஆனால் தொடர்ந்து தன்னை பிறர் கொலை செய்ய நினைக்கிறார்கள் என்ற மனப்பிறழ்வு எண்ணம் என்பது ஆபத்தானது. இதற்கு சிகிச்சை செய்யாமல் விட்டால்  காலப்போக்கில் பிறரையும் கொலை செய்யத் தூண்டும் அல்லது தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் தூண்டும்.

பாரானியா
பாரானியா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதன் அறிகுறிகள் தான் என்ன?

தன்னைப் பற்றி எப்போதும் பிறர் தவறாகப் பேசிக் கொள்கிறார்கள்.

தன்னைப் போட்டுத் தள்ள சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.

உலகமே நான் வாழ்வதற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

தன்னைப் பற்றி தவறுகளை சுட்டிக் காட்டினாலும் அதை நான் வெறுப்பேன்.

எப்போதும் பிறருடன் இணங்க மறுத்து சண்டை போட்டுக் கொண்டும் விதண்டாவாதம் பேசிக் கொண்டு இருப்பது.

யாரையும் எவரையும் நம்பாமல் இருப்பது.

இப்படியாக ஆரம்பிக்கும் பிறகு தன்னைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போடுகிறார்கள் என்ற அளவுக்கு அதீத சந்தேக புத்தியாக மாறும்.

பல நேரங்களில் பாரானியா என்பது சைக்கோசிஸ் எனப்படும் தீவிர தன்னிலை மறந்த மனநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

பாரானியாவில் பொதுவான நான்கு வகை உண்டு

1.நம்பிக்கையின்மை

நெருங்கிய உறவினரிலிருந்து நண்பர்கள் யாரையும் நம்ப மறுப்பது. எந்தக் காரணமும் இல்லாமல் சந்தேகிப்பது.

2.பிறர் செய்யும் செய்கைக்கு அதிக சென்சிடிவாக இருப்பது – அருகில் இருவர் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாலும் அது தன்னைப் பற்றித் தான் பேசி சிரிக்கிறார்கள் என்று எண்ணுவது – சாதரணமாக நம்மைப் பார்த்து ஒருவர் புன்னகை செய்தாலும், அவர் உள்ளே பழிவாங்கும் எண்ணத்துடன் தான் சிரிக்கிறார் என்று எண்ணுவது

3.தனக்கு நடக்கும் சாதாரண நிகழ்வுகளையும் பிறருடன் தொடர்பு படுத்தி சந்தேகப்படுவது. சாதாரணமாக கரண்ட் கட் ஆனாலும் இந்த இருட்டை பயன்படுத்தி தன்னை கொல்லத்தான் இப்படி நடக்கிறது என்று எண்ணுவது.

4.தன்னை ஒருவர் தவறாக நடத்துவதாகவும், தனக்கு ஊறு செய்ய நினைத்து பின்தொடர்வதாகவும் , தன்னை வேவு பார்ப்பதாகவும் , நிச்சயம் கொலை செய்து விடுவார் என்று எண்ணி காவல் துறையில் அடிக்கடி புகார் செய்யும் அளவு பிரச்சனை செல்லும் சிறு வயதில் ஏற்பட்ட மனம் மற்றும் உடல் சார்ந்த காயங்கள், தீவிர மன அழுத்தம், சமூகத்தில் இருந்து ஒதுக்குதலுக்கு உள்ளாகுதல் ஆகியவை இந்த நோய்க்கு காரணமாக இருக்கலாம்.

பாரானியாஇதற்கான முறையான மனநல மருத்துவ சிகிச்சை மற்றும் ஆற்றுப்படுத்துதல் சிகிச்சை அவசியம்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஆனால் அதைச் செய்யாமல் செயற்கை நுண்ணறிவு எனப்படும் சாட் ஜிபிடி துணையை நாடவே அதற்கும் இவர் கேட்ட சந்தேகிக்கும்  கேள்விகளால் பாரானியா நோய் ஏற்பட்டு விட்டது போல உனது தாய் உன்னை கொல்ல நினைக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூற தனது தாயையும் கொன்று விட்டு பிறகு குற்ற உணர்ச்சியில் தானும் தன்னை மாய்த்துக் கொண்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் தற்போதைய செயல்வடிவம்  என்பது “ஆரம்ப கட்ட பரிசோதனை” அளவில் தான் இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன்.

இதை வைத்து அதை ஒரு உறவினர் போல வாழ்க்கைத் துணை போல அதனிடம் உறவாடுவது ஆபத்தானது.

செயற்கை நுண்ணறிவிற்கு நாம் எதை அறிவாக ஏற்றி வைத்திருக்கிறோமோ அதில் இருந்து தான் பதிலைத் தரத் தெரியும்.

அதற்கு மருத்துவர்களைப் போல நோயாளிகளை நேரில் பார்த்து பரிசோதித்து கிடைக்கும் அறிவோ தவறுகளைச் செய்து பாடம் கற்ற பட்டறிவோ தொடர்ந்து பல ஆண்டுகள் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து கற்ற அனுபவ அறிவோ எதுவுமே இருக்காது.

சாட் ஜிபிடி எந்த மாதிரி பதிலைத் தரும் என்பது நாம் கேட்கும் கேள்விகளில் இருந்தே பிறக்கும்.

தன் தாயை மாய்த்த இந்த சகோதரர் என்ன கேட்டிருப்பார்?

“எனது தாய் என்னைக் கொல்வதற்கு வாய்ப்பு உள்ளதா?”

உடனே சாட் ஜிபிடி தனது ட்ரைவில் இதுகுறித்து பார்த்து

“இதுவரை பல தருணங்களில் தாய் பிள்ளையைக் கொன்ற சந்தர்ப்பங்கள் உலகில் நடந்துள்ளன.”

இப்படிக் கூறியதும் ஏற்கனவே பாரானியா இருக்கும் மனநோயருக்கு அது இன்னும் சந்தேகத்தை உந்தி அதுவே இரண்டு உயிர் இறப்பதில் முடிந்திருக்கிறது.

Dr .அ.ப.ஃபரூக் அப்துல்லா,
Dr .அ.ப.ஃபரூக் அப்துல்லா,

இதுவே அந்த சகோதரர் இதே கேள்வியை ஒரு மனநல மருத்துவரிடம் கேட்டிருந்தால் அவர் ” உனது தாய் உன்னைக் கொல்வாரா?

உனது தாய் உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார். நீ தான் சந்தேகப்படுகிறாய். அவர் நீ நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்றே விரும்புகிறார். முறையான சிகிச்சை எடு” என்று கூறியிருப்பார்.

இங்கே சாட் ஜிபிடியிலோ செயற்கை நுண்ணறிவிலோ எந்த பிரச்சனையும் இல்லை.

அதை உபயோகப்படுத்தும் நம் மீது தான் பிரச்சனை.

சாட் ஜிபிடிக்கு யோசிக்கவோ சிந்திக்கவோ தெரியாது. அதற்கு உணர்வு உணர்ச்சி எதுவும் கிடையாது. எனவே அதனிடம் போய்

எதைப் பற்றியும் கேள்வி கேட்டாலும் அதற்குரிய “அறிவு” ரீதியான “தகவல்” ரீதியான பதிலை அது வழங்கும்.

எந்த செயற்கை நுண்ணறிவும் ஒரு கற்றுணர்ந்த அனுபவம் கொண்ட ரத்தமும் சதையுமான “மனித மருத்துவருக்கு” ஈடாக முடியாது என்பதை பணிவுடன் மறுபடி மறுபடி பதிவு செய்கிறேன்.

 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.