”அஞ்சலிக்கு ஆதரவு கொடுக்கும் டைரக்டர் ராம்” -’பறந்து போ’ விழாவில் பறந்து வந்த ஸ்பீச்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்கும் ‘பறந்து போ’ படத்தை ராம் டைரக்ட் பண்ணியுள்ளார். ‘மிர்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மாஸ்டர் மிதுன் ரியான், அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் உட்பட பலர் நடித்துள்ள இப்படம் ஜூலை.04—ஆம் தேதி வெளியாவதால், ஜூன். 26—ஆம் தேதி இரவு சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. பிரம்மாண்டம்னா சும்மா இல்ல, படத்தில் நடித்தவர்கள் தவிர, சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், கலைப்புலி தாணு, சுரேஷ் காமாட்சி, தனஞ்செயன், டைரக்டர்கள் பாலா, வெற்றிமாறன், ராம், மாரிசெல்வராஜ், ரவிக்குமார், ஏ.எல்.விஜய்,  அபிசன் ஜீவீந், ராஜுமுருகன், விக்ரம்ன், கஸ்தூரி ராஜா, பாலாஜி சக்திவேல், பிக்பாஸ் முத்துக்குமரன், ‘நீயா? நானா?’ கோபிநாத், மருத்துவர் கு.சிவராமன், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, படத்தில் பின்னணி பாடிய நடிகர் சித்தார்த் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தொகுப்பாளினி ‘டி.டி.’ ன்னு மொத்தம் 42 பேர் விழாவில் கலந்து கொண்ட ரொம்பவே பிரமிக்க வைத்தனர். நான்கு மணி நேரம் விழா நடந்ததால் வந்திருந்த அனைவருமே ரொம்பவும் திக்குமுக்காடிவிட்டனர்.

’பறந்து போ'42 பேருமே படத்தைப் பற்றியும் டைரக்டர் ராம் வருடத்திற்கு ஒரு படமாவது டைரக்ட் பண்ண வேண்டும் என்பது பற்றியும் பேசினார்கள்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

 தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும் போது,

“ராமின் எல்லாப்படங்களிலும் ஹீரோயின் அஞ்சலி இருப்பார். அதே போல் இப்படத்திலும் இருக்கார். ராம் மீது அஞ்சலிக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதால் தான் தொடர்ந்து அவரின் படங்களில் நடிக்கிறார். இந்த பறந்து போ அனைவரின் கவலைகளையும் பறந்து போகச் செய்யும்”.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

’பறந்து போ'பி.எல்.தேனப்பன்,

“இங்க இருக்கும் 90% பேர் இப்படத்தைப் பார்த்துட்டாங்க. நான் மட்டும் தான் பார்க்கல, ஏன்னா என்னைக் கூப்பிடலை. ஏன்னா நான் ராமை வைத்து ‘பேரன்பு’ படத்தைத் தயாரித்தவன். எனிவே பெஸ்ட் ஆஃப் லக்”.

சித்தாத்,

“ராம் சாரின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி தான் அஞ்சலி. தெலுங்கு சினிமாவிலும் ஜெயிக்கும் அஞ்சலிக்கு தமிழில் சிறிய இடைவெளி விட்டு இப்படம் வந்துள்ளது. டைரக்டர் ராம் எப்போதுமே வெயிட்டான கதைகளைத் தான் எடுப்பார். ஆனா இந்தப் படம் மிகவும் கலகலப்பு மற்றும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். மிர்சி சிவா தான் ராமுக்கு வேக்ஸினாக இருக்கிறார்”.

 

—    மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.