’பறந்து போ’ விழாவில் சிவா செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் , செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை.04-ல் ரிலீஸ் ஆகி, இப்போது வரை குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வந்து மகிழ்ச்சியுடன் கிளம்பி போகிறார்கள். இதனால் கவலைகள் பறந்து போன படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ( ஜூலை 08-ஆம் தேதி) நடந்தது.
ஹாட்ஸ்டார் பிரதீப், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, சிறுவன் மிதுல் ராயன், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் மகிழ்ச்சியுடன் நன்றியை வெளிப்படுத்தினார்கள்.
சென்னை கமலா சினிமாஸ், விஷ்ணு, ‘பறந்து போ’ படத்தின் டைட்டில் போலவே டிக்கெட்டுகளும் பறந்து கொண்டிருக்கிறது. ஷோ ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தப் படம் பார்த்து ஆடியன்ஸ் சிரித்து கொண்டாடுகிறார்கள் “.

நடிகர் சிவா,
“மனதார அனைவருக்கும் நன்றி. இந்த மேடையில் கிரேஸ் கண்கலங்கியதைப் பார்த்து எனக்கும் எமோஷனல் ஆகிவிட்டது. ராம் சாரின் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. படத்திற்காக மலை ஏறியது, வெயிலில் அலைந்தது இதை எல்லாம் தாண்டி மக்கள் நீங்கள் ரசித்து பார்த்ததுதான் மகிழ்ச்சி” என பேசிய சிவா, ராமின் உதவி இயக்குனர்கள், ராமுடனேயே பயணிக்கும் அமுதவன், படத்தின் தயாரிப்பில் உதவியாக இருந்த அனைவரையும் நினைவில் வைத்து நன்றி சொன்னது மட்டுமல்லாமல் அவர்களை மேடையேற்றி அறிமுகப்படுத்தி நெகிழ வைத்தார் சிவா.
இயக்குநர் ராம்,
“நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. படம் வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்த மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படம் திரைக்கு வரவேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள். சினிமா என்பது கணிக்க முடியாத கேம். படத்தின் புரோமோஷன் பணிகள் மூலம் ‘பறந்து போ’ என்று ஒரு படம் வெளியாக இருக்கிறது என்ற விஷயம் பலருக்கும் தெரிய வந்தது.

சமகால தலைமுறையினருடன் இந்தப் படம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது என்பது மகிழ்ச்சி. ஹாட்ஸ்டார் பிரதீப் சார் இந்தப் படத்திற்கு பெரிய பலம். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் என்னுடைய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சார் படம் மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்டதற்கு நன்றி. பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா சார் மற்றும் டீமுக்கு நன்றி. நிறைய குழந்தைகளை என் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய எனது மனைவி மகன், மகள் ஆகியோருக்கு நன்றி”.