அங்குசம் பார்வையில் ‘பறந்து போ’  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ’ஜியோ ஹாட் ஸ்டார்’, ’ஜி,கே.எஸ்.புரொடக்‌ஷன்’, ’செவன் சீஸ் & செவன் ஹில்ஸ்’ ராம், வி.குணசேகரன், வி.கருப்புசாமி, வி.ஷங்கர். தமிழ்நாடு ரிலீஸ் : ’ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல்.  இயக்கம் : ராம். நடிகர்-நடிகைகள்: ‘மிர்ச்சி’ சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ராயன், அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் ஜேசுதாஸ், பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி. ஒளிப்பதிவு : என்.கே.ஏகாம்பரம், பின்னணி இசை : யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் இசை : சந்தோஷ் தயாநிதி, பாடல்கள்: மதன் கார்க்கி, எடிட்டிங் :வி.எஸ்.மதி, தயாரிப்பு வடிவமைப்பு : குமார் கங்கப்பன். பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல் நாசர்.

எல்லா சினிமாக்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவை தான் என்றாலும் இந்த ‘பறந்து போ’வில் பள்ளிக் குழந்தைகள் உலகத்தை அனுபவித்து, மிக அருமையான திரைமொழியால் உள்ளுக்குள் நல்லுணர்வையும் நல்ல கருத்தையும் விதைத்தற்காக இயக்குனர் ராம் மற்றும் அவரது இந்தப் படைப்பில் உள்ள குறைகளை ரொம்பவும் குறைவாக சொல்வதே நியாமானதாக இருக்கும்.

Sri Kumaran Mini HAll Trichy

சென்னையில் ஆர்க்கானிக் பொருட்களை விற்கும் கோகுலுக்கு[ சிவா] குளோரி [கிரேஸ் ஆண்டனி} என்ற மனைவியும் அன்பு[மிதுல் ராயன்] என்ற மகனும்  உள்ளனர். கோவையில் நடக்கும் எக்ஸ்போ அரங்கில் ஜவுளிக்கடை போட்டதால் சில நாட்கள் அங்கேயே தங்க வேண்டிய சூழல் குளோரிக்கு. இதனால் அன்புவை கவனிக்கும் பொறுப்பு கோகுலுக்கு.

பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மகன் செய்யும் சின்னச் சேட்டை, பெரிய சேட்டைகளை பொறுத்துக் கொண்டு அவனை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார் கோகுல். கோவையில் இருக்கும் அம்மா குளோரி,  தினமும் மகனுடன் போனில் பேசுகிறாள். அன்புவை  பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி சிவாவிடம்  சொல்கிறாள். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் அன்புவுக்கு சாப்பாடு பர்கர், பீட்சா. பொழுது போக்கு வீடியோ கேம். போதாக்குறைக்கு பகலில் ஸ்கூல் மிஸ்ஸின் ஆன்லைன் கிளாஸ் வேறு.

 இதனால் ஒருவித மனபாரத்துடன் இருக்கும் அன்பு, ஒரு நாள் அப்பா கோகுலைக் கட்டாயப்படுத்தி, சென்னை சிட்டியைவிட்டு ரொம்ப தூரம் கூட்டிட்டுப் போகிறான். மலை மீது ஏறுகிறான். அப்பா கோகுலும் ஏறுகிறார். அங்கிருந்து அன்புவின் தாத்தா-பாட்டி, அதாவது கோகுலின் அப்பா-அம்மா [பாலாஜி சக்திவேல்- ஸ்ரீஜா ரவி ] வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கிருந்து அப்படியே ‘ரோட் ட்ரிப்’ போக வேண்டும் என அடம் பிடிக்கிறான் அன்பு. அப்படிப் போகும் வழியில் தன்னுடன் அஞ்சாப்பு படித்த தோழி அஞ்சலியையும் அவரது கணவரையும் [ அஜு வர்க்கீஸ்] சந்திக்கிறான்  கோகுல். அஞ்சலியின் மகன் சுதந்திரமாக திரிவதைப் பார்த்து ஏங்குகிறான் அன்பு.

பறந்து போ நகர வாழ்க்கை, பள்ளிப்படிப்புச் சுமை, அம்மா ஓரிடம் அப்பா ஓரிடம் இவையெல்லாவற்றையும் மறந்து மனதில் சுகத்துடன் பறந்து போகிறான் அன்பு. இது வரை தான் நம்மால் எழுத்தில் சொல்ல முடியும்.

நமக்கும் சுகமான பயண அனுபவமும் பறந்து போகும் இதமான அனுபவமும் கிடைக்கணும்னா இரண்டரை மணி நேரத்தை நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்கில் பார்ப்பது மகானுபவம். மனசு லேசாகும்.

Flats in Trichy for Sale

“ஸ்கூல் விட்டதும் டியூஷன், மியூசிக் கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ், டான்ஸ் கிளாஸ்னு ஏன்னா பச்சப்புள்ளைய சித்ரவதை பண்றே” பாலாஜி சக்திவேலின் இந்த வசனம் தான் ’பறந்து போ’வின் உந்து சக்தி.

சிவா
சிவா

அதிரிபுதிரி காமெடி ஸ்டாராகவே நாம் பார்த்துப் பழகிய சிவாவா இது? என நம்மை சிலிர்க்க வைத்துவிட்டார் கோகுல்[எ] மிர்ச்சி சிவா. நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனின் உடை,  உடல் மொழி, வசன உச்சரிப்பு என ராமின் அன்புக்கு கட்டுப்பட்டுவராக நடிப்பில் அசத்தியிருந்தாலும் சில சீன்களில் அவரது டிரேட் மார்க் டயலாக் அட்டாக் காமெடியையும் விடவில்லை சிவா. இந்த ‘பறந்து போ’வில் சிவா ஹீரோ இல்லை, கதையின் நாயகன் என்பதில் சந்தேகமேயில்லை. ஹலோ பிரதர் சிவா, தொடரட்டும் உங்கள் நடிப்புத் தொண்டு.

படத்தின் இன்னொரு நாயகன் மிதுல் ராயன் தான். வீட்டைவிட்டு வெளியே வந்து வேறொரு உலகத்தைப் பார்த்ததும் மனமாற்றங்களை, பேச்சு மொழியை, அனாயசமாக வெளிப்படுத்தியிருக்கான் மாஸ்டர் மிதுல் ராயன். சிவாவின் மனைவியாக , மிதுலின் அம்மாவாக கிரேஸ் ஆண்டனியும் கிரேட் தான். நடிப்பிலும் உருவத்திலும். ஆரம்பத்தில் கோவையிலிருந்தபடியே சிவாவுடனும் மிதுலுடனும் போனில் அடிக்கடி பேசும் காட்சிகள் கொஞ்சம் சலிப்பூட்டத்தான் செய்கிறது. ஆனால் திண்டிவனத்தில் வந்திறங்கிய பிறகு கிரேஸின் நடிப்பு செம கிரேஸ் & சபாஷ்.

ஹீரோயின் கிரேஸ் ஆண்டனி
ஹீரோயின் கிரேஸ் ஆண்டனி

இயக்குனர் ராமின் கதை சொல்லலுக்கு  பாடல்களாலேயே பின்னணி இசையைக் கொடுத்து மனதை ரம்மியமாக்குகிறார் சந்தோஷ் தயாநிதி. இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜாவோ, பாடல் இல்லாத இடங்களில் தனது பின்னணி இசை ராஜாங்கத்தை நடத்திவிட்டார். குறிப்பாக சிவாவும் மிதுலும் பாழடைந்த கோவிலில் மழை இரவில் தங்கியிருக்கும் காட்சியில் மெய்சிலிர்க்கும் அனுபவம்.

இவர்கள் இருவருக்கும் சற்றும் சளைத்தவனல்ல நான் என்பதை நிரூபித்துவிட்டார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். மலை உச்சியில் மிதுல், நடுவில் சிவா, கீழ்ப்பகுதியில் அஞ்சலி [ பல ஆயிரம் அடிகள் இடைவெளி] ஆகிய மூவருக்கும் சேர்த்து ஒரு ஃபிரேம் வச்சுருக்காரு மனுஷன். அடேங்கப்பா… அடேங்கப்பா.. இது போல பல சீன்களில் பிரமிப்பப்பா..

படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கு மட்டுமல்ல, இரண்டு சீனில் வரும் விஜய் ஜேசுதாஸ் தம்பதி, குழந்தை ஜென்னா, கோவையில் கிரேஸின் கடையில் வேலை பார்க்கும் சிறுமி, பாழடைந்த கோவிலில் பராரியாக இருக்கும் ‘எம்பரர்’ கேரக்டர், என சின்னச் சின்ன கேரக்டர்களிலும் ”அங்க போனா என்ன சாதின்னு கேட்பான், இங்கே போனா என்ன மதம்னு கேட்பான்” வசனத்திலும் இயக்குனர் ராம் கம்பீரமாக பறக்கிறார்.

 

—    மதுரை மாறன்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.