அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘பராசக்தி’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். தமிழ்நாடு ரிலீஸ்: இன்பன் உதயநிதி வழங்கும் ரெட் ஜெயண்ட். எழுத்து & இயக்கம்: சுதா கொங்கரா. நடிகர்- நடிகைகள்: சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா, சேத்தன், பிருதிவ் பாண்டியராஜன், காளி வெங்கட், குளப்புள்ளி லீலா, ராணா டகுபதி, ஆனந்த். ஒளிப்பதிவு: ரவி கே.சந்திரன், இசை: ஜி.வி.பிரகாஷ், எடிட்டிங்: சதீஷ் சூர்யா, ஆர்ட் டைரக்டர்: எஸ்.அண்ணாதுரை, தலைமை ஆலோசனை: பேராசிரியர் டாக்டர் அ.இராமசாமி, கூடுதல் வசனம்: மதன் கார்க்கி, ஷான் கருப்பசாமி , ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர் , நடனம்: பிருந்தா, அனுஷா, தயாரிப்பு வடிவமைப்பு: எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார், காஸ்ட்யூம் டிசைனர்: பூர்ணிமா, காஸ்ட்யூமர்: அருண் மோகன் பி.ஆர்.ஓ.: சதீஷ் (எய்ம்), சுரேஷ் சந்திரா, ஏ.அப்துல்நாசர்.

இது திரைப்படக் கதையல்ல. இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த தமிழினத்தின் எழுச்சிமிகு போர் வரலாறு. இதை நேர்மையுடனும் உண்மையுடனும் உணர்வுடனும் பதிவு செய்துள்ள இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் இன்றைய இளம் தலைமுறைக்கு தமிழினத்தின் வீரம் செறிந்த போராட்டக் களத்தை திரையில் கொண்டு வர மிகப்பெரியளவில் பணத்தை முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் நன்றியையும் பாராட்டையும் முதலிலேயே சொல்லிவிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பராசக்திஇந்த இருவரின் எண்ணத்திற்கும் உற்ற துணையாக இருந்து, இளைஞர்களை அதீத உணர்ச்சிவசப்பட வைக்காமல், நியாயமான தன்னெழுச்சியை தட்டி எழுப்பிய ‘பராசக்தி’யின் கதாநாயகன், நம்ம சிவகார்த்திகேயனுக்கு காலம் முழுவதும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆரத்தழுவி பாராட்டிக்கொண்டே இருக்கலாம். அத்தனைக்கும் தகுதியானவர் தான் நம்ம எஸ்.கே.

1938-ல் தந்தை பெரியார் துவக்கி வைத்த இந்தி எதிர்ப்பு போரில் கதை தொடங்கினாலும் 1959-ல்  இந்தி திணிப்புக்கு எதிராக   மதுரை செழியனின் [ சிவகார்த்திகேயன்] ரயில் எரிப்புப் போராட்டத்திலிருந்து தான் கதைக்களம் உலைக்களமாகி தமிழர்களின் கொதி நிலையை டெல்லிக்கு எடுத்துக்காட்டி  சூடு பிடிக்கிறது. இத்தனைக்கும் ரயில் இன் ஜினில் நிலக்கரி அள்ளிப் போடும் வேலை பார்க்கிறார் செழியன். தனது தம்பி சின்னதுரையை[அதர்வா முரளி] சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்கிறார். ரயில் எரிப்பின் போது தனது உயிருக்கு உயிரான நண்பன் தீக்கிரையானது தெரிந்ததும் இனிமேல் போராடப் போவதில்லை என்ற முடிவுக்கு வருகிறார் செழியன்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பராசக்திஆனால் தம்பி சின்னதுரையோ அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்தி சினிமா போட்டதை நிப்பாட்டி கலைஞரின் ‘பராசக்தி’யை திரையிட்டு தனது தமிழ் உணர்வைப் பற்ற வைக்கிறார். இதற்கு தெலுங்கு பேசும் காங்கிரஸ் எம்.பி.யின் மகள் ரத்னமாலா [ஸ்ரீலீலா] உதவுகிறார்.   அந்த ரத்னமாலாவிடம் இந்தி கற்றுக் கொண்டு பெரிய வேலைக்கான இண்டர்வியூவுக்குப் போகிறார் செழியன். அங்கே இந்தி அதிகாரிகளால் அவமானப்படுத்தப்படுகிறார். இங்கே மதறாஸ் மாநில முதல்வர் கக்கனின் இந்தி வெறியால் யுபிஎஸ்சி பரீட்சை எழுதப்போன மாணவன் தீக்குளித்து இறக்கிறான். இதைப் பார்த்து கலங்கும் செழியன், மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிரான போரில் தீவிரம் காட்டுகிறார். தமிழ்நாடெங்கும் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் படை திரள்கின்றனர்.

1967—ல் மதறாஸ் மாகாண முதல்வராகும் அறிஞர் அண்ணா, “தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும்” என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார். மாணவர் சக்தி மகிழ்ச்சியடைகிறது.

இதான் இப்போதைய ‘பராசக்தீ…..’

பராசக்தி“சார் நான் ஆறு மாசமா இந்தி கத்துக்கிட்டு வந்திருக்கேன். ஆனா வடக்கே பிறந்ததிலிருந்தே இந்தி பேசுறவன் மாதிரி நான் பேசணும்னா எப்படி சார்? செழியன்கிற என்னோட பேரைச் சொல்ல நீங்க எப்படி திணறுகிறீர்களோ.. அது மாதிரி சார் எங்களுக்கு இந்தி” இண்டர்வியூவில் ஒருவித ஏக்க மனதுடன் பேசும் காட்சியிலும் “கொடூர போலீஸ் அதிகாரி ரவி மோகனின் கடும் சித்ரவதைக்குள்ளாகி ரத்தம் வழிந்த நிலையிலும் “செந்தமிழைக் காக்க பெருஞ்சேனை உண்டு” என உறுமும் காட்சி, தம்பி அதர்வா அதே ரவி மோகனால் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் அவனைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி செல்லும் காட்சி, “இப்பவும் நாங்க அதையே தான் சொல்றோம் மேடம். இந்தியை நாங்க கத்துக்க தயார், அதுக்காக திணிக்க நினைக்காதீங்க” என பிரதமர் இந்திராவிடம் பேசிவிட்டு, “உங்க அப்பா [நேரு] கொடுத்த வாக்குறுதியைக் காப்பாத்துங்க மேடம்” என உணர்வுடனும் உயிர்ப்புடனும் பேசும் காட்சி, ஸ்ரீலீலாவுடன் சில காதல் காட்சி, இந்தி கற்றுக் கொள்ளும் போது “கட்டிலுக்கும் சேருக்கும் பொருத்தம்னா நல்லவாயிருக்கு” என ஏகாசி பேசுவது, பாட்டி குளப்புல்லி லீலாவிடம் பாசம் காட்டுவது என படம் முழுக்க செழியனாகவே வாழ்ந்திருக்கிறார் நம்ம எஸ்.கே.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

காங்கிரஸ் ஆட்சியின் கொடூர போலீஸ் அதிகாரியாக ரவி மோகன். அடேங்கப்பா….பார்வையாளனை குலைநடுங்க வச்சுட்டான் மனுஷன். “வெள்ளைக்காரன் வெறும் ஒன்றரை லட்சம் பேரு தான். ஆனா கோடிக்கணக்கான இந்தியர்களை துப்பாக்கி வெடிச்சத்தத்தை காட்டி ஒடுக்கலையா?” என குரூரமாக பேசும் காட்சி, பொள்ளாச்சியில் மக்களை கொத்துக் கொத்தாக சுட்டுத்தள்ளும் காட்சி [ பழனிச்சாமி ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்முன்னால வந்து போகுது] க்ளைமாக்ஸில் ஓடும் ரயிலில்  சிவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் [ சுப்ரீம் சுந்தரின் ஸ்டண்ட் கம்போஸிங் செம த்ரில்லிங்] காட்சி, முதல்வர் பக்தவத்சலத்துக்கு முன்பாக கெத்தாக பேசும் காட்சி என ரவிமோகன் பின்னிட்டார்.

பராசக்திபொதுவாக எல்லா கதாநாயகிகளும் படம் வெளிவருவதற்கு முன்பு, “இதுல நான்  வழக்கமான ஹீரோயின் இல்ல. ரொம்பவே டிஃபெரெண்டான கேரக்டர். படம் பார்த்தா உங்களுக்கே புரியும்”னு சொல்வார்கள். ஆனால் படத்திலோ வழக்கம் போல வருவார்கள், சில ஹீரோயின்கள் அரைலூசு மாதிரி வருவார்கள்.

ஆனால் இந்த பராசக்தியின் ஹீரோயின் ஸ்ரீலீலா எல்லா வழக்கத்தையும் உடைத்து தனித்து தெரிந்து படத்தின் டிரெய்லர் விழாவில் சொன்னதை உண்மைப்படுத்தியிருக்கிறார். “தெலுங்கு தான் ஆட்சி மொழின்னு திணிச்சாலும் அதை நான் எதிர்ப்பேண்டா” சிவாவின் நண்பனிடம் கோபம் காட்டுவது, “ஒரு இனத்தின் மொழியை அழிச்சா…அவனின் அடையாளத்தை அழிச்சிரலாம். அடையாளத்தை அழிச்சா அவனை அடிமைப்படுத்திரலாம்னு நினைக்காதீங்க” என க்ளைமாக்ஸில் ஆவேசக்குரல் எழுப்பும் ஸ்ரீலீலா… தாயீ… நீ வாழ்க. இந்த அனல் கக்கும் வசனத்தை பெண் கேரக்டர் மூலம் பேசிய இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சபாஷ்.

சின்னதுரையாக அதர்வா. தம்பி இந்த ஃபயரை இம்புட்டு நாளா எங்கய்யா ஒளிச்சு வச்சுருந்தே? “அரக்கர்களிடம் அறப்போர் நடத்துவதில் பலனில்லை” எஸ்கேவிடம் பேசும் இந்த வசனம் போதும் அதர்வாவுக்கு… வாழ்த்துக்கள் சகோதரா… அறிஞர் அண்ணாவாக சேத்தன், சாலப்பொருத்தம். பொள்ளாச்சிக்காரராக காளிவெங்கட், புறநானூற்றுப்படையின் ஆந்திர மாநிலத் தலைவராக ராணா டகுபதி, மேற்குவங்கத் தலைவராக சின்னத்திரை நடிகை பாப்ரி கோஸ், கர்நாடக மாநிலத்தலைவர் ஷெரீப்பாக நடித்திருக்கும் நடிகர், கேரளத் தலைவராக நடித்திருக்கும் மிலிட்டரி ஆபீசர் என எல்லா கதாபாத்திரங்களையும் பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்துவிட்டார் இயக்குன சுதா கொங்கரா.

இந்த ‘பராசக்தி’க்கு பலம் சேர்ந்த மாபெரும் தொழில்நுட்ப உழைப்பாளிகளில் முக்கியமான மூன்று பேர் ஒளிப்பதிவாளர் மரியாதைக்குரிய ரவி கே.சந்திரன், இசையமைப்பாளர் அன்பிற்குரிய சகோதரன் ஜி.வி.பிரகாஷ், பாராட்டுக்குரிய ஆரட் டைரக்டர் அண்ணாதுரை ஆகியோரும் அதற்கடுத்து ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமாவும் உள்ளனர்.

பராசக்திக்ளைமாக்ஸில் எஸ்கேவும் ரவி மோகனும் ரயிலில்  மோதும் சீனில் மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் ரவி கே.சந்திரன். 1954, 64 காலகட்டத்திற்கான கலர் டோனை கச்சிதமாக திரையில் கொண்டு வந்துள்ளார் ரவி கே.சந்திரன். எல்லா பாடல்களிலும் பின்னணி இசையிலும் ஜி.வி.பி. ஜொலித்தாலும் “ரத்னமாலா….” பாடலில் இசைக்கருவிகளின் ஒலி மனசுக்கு பெரிய இதமாக இருந்தது.

‘பராசக்தி’யின் ஆகப்பெரிய சக்தி வாய்ந்த ஆயுதம் வசனம் தான். “இந்தி வாழ்கன்னு எழுதியிருக்கேன். அது புரியாமத்தானே பஸ்ஸை அடிக்குறாய்ங்க” டெல்லியில் சிவகார்த்திகேயன் பேசும் இந்த  வசனம் ஒரு சின்ன உதாரணம் தான். 2 மணி நேரம் 35 நிமிட படம் முழுவதும் வீரியமிகு வார்த்தைகளில்  கூடுதல் வசனம் எழுதிய சகோதர்கள் மதன் கார்க்கி மற்றும் ஷான் கருப்பசாமிக்கு நன்றிகள் உரித்தாகட்டும். ரத்தத்தில் தமிழ் உணர்வு உள்ளவர்களால் இப்படி எழுத முடியும். “சூரியன் உதிக்கும் போது முரசொலிக்கும்” குரு சோமசுந்தரம் பேசும் இந்த வசனம்….  எழுதி இயக்கிய  சுதா கொங்கராவுக்கும் வீரவரலாறை சினிமாவாக்கிய  தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் மீண்டும் மீண்டும்  நன்றி.

தமிழ் சினிமாவில் நம்ம சிவகார்த்திகேயனுக்கு தங்க சிம்மாசனம் தந்திருக்கிறது இந்த ‘பராசக்தி’ . வாழ்க நீ எம்மான்…

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.