அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘பரிசு’ 

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ’ஸ்ரீகலா கிரியேஷன்ஸ்’. கதை-திரைக்கதை—வசனம்-டைரக்‌ஷன் : கலா அல்லூரி. ஆர்ட்டிஸ்ட் : ஜான்விகா, ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு, சென்ட்ராயன், சச்சு, பிரதீப், சுதாகர், ஜெய்பாலா, ஒளிப்பதிவு : சங்கர் செல்வராஜ், பாடல்கள்  இசை : ராஜீஷ், பின்னணி இசை : சி.வி.ஹமரா, எடிட்டிங்: சி.எஸ்.பிரேம்குமார், ராம் கோபி, ஸ்டண்ட் : கோட்டி & இளங்கோ, நடனம் : சுரேஷ்சித், பி.ஆர்.ஓ.: சக்தி சரவணன்.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான ஆடுகளம் நரேனுக்கு தனது மகளையும் [ ஹீரோயின் ஜான்விகா ] ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் துப்பாகி சுடுதல் உட்பட பல பயிற்சிகளைக் கொடுக்கிறார். கல்லூரியில் படிக்கும் ஜான்விகாவும் அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்ற கடுமையான பயிற்சிகளை எடுக்கிறார். அப்பப்ப கேப் கிடைக்கும் போதெல்லாம், “நம்ம பாரதப்பிரதமர் [ நல்லா கவனிங்க, இந்தியப் பிரதமர் அல்ல, பாரதப் பிரதமர்] ராணுவத்தை எவ்வளவு பவர்ஃபுல்லா வச்சிருக்காரு தெரியுமா? பெண்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார் தெரியுமா? விவசாயிகளுக்கு மாசாமாசம் எவ்வளவு பணம் கொடுத்து உதவுறார் தெரியுமா?, இந்த நாட்டுக்கு எவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு தெரியுமா?” என ஒன்றிய அரசின் விளம்பரப் படத்தில் பேசுவது போல பேசுகிறார். “ஆமாம்மா….அற்புதம்மா…”என்கிறார் ஆடுகளம் நரேன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பரிசுஇந்தக் கொடுமை பத்தாதுன்னு நம்ம மோடிஜியின் ‘தூய்மை இந்தியா’வின் பெருமை பேச ஒரு பாடலுக்கு கும்பலாக டான்ஸ் ஆடி, முழு சங்கியாகி நம்மையெல்லாம் ஆட்டம் காண வைத்துவிட்டார் ஹீரோயின் ஜான்விகாவும்  படத்தின் தயாரிப்பாளரும் டைரக்டருமான, ஜான்விகாவின் அம்மா கலா அல்லூரி.

சரி, இப்ப படத்தோட கதைக்கு வாப்பா என்கிறீர்களா? படம் ஆரம்பமே இப்படிங்கும் போது, கதைக்கு எப்படிங்க போறது? இருந்தாலும் சொல்லுவோம்.

https://www.livyashree.com/

ராணுவத்தில் சேர்ந்து தனது அப்பாவுக்கு உயர்ந்த பரிசு கொடுக்க வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் காலேஜில் படிக்கும் ஜான்விகாவை கிரண் பிரதாப் லவ் தூதுவிட்டுப் பார்க்கிறார். அதே ஊரில் வசிக்கும் ஜான்விகாவின் மாமா செண்ட்ராயன் வீட்டு விசேசத்துக்கு போட்டோ எடுக்க வரும் ராஜேஷ் மீது ஜான்விகாவுக்கு ஒருவித இது என்றாலும் லவ் இல்லை. ஏன்னா ராணுவத்தில் சேரும் தனது லட்சியத்துக்கு இடைஞ்சல் வந்துரக்கூடாது என்ற உஷாருடன் காதலை தள்ளிவைக்கிறார். இடையிடையே இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி வயல்வெளியில் டிராக்டர் ஓட்டுகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதே ஊரில் இலவச மருத்துவமனை என்ற பெயரில் ஏழைகளின் உடல் உறுப்புகளைத் திருடும் மாஃபியா சுதாகரின் மொள்ளமாரித்தனத்தை செல்போனில் வீடியோ எடுத்துவிடுகிறார் அதே ஆஸ்பத்திரியில் டாக்டராக இருக்கும் ஒருவர். இதைத் தெரிந்து ஆத்திரமாகும் சுதாகர் அந்த டாக்டரைப் போட்டுத்தள்ள லாரியைவிட்டு ஏத்துகிறார். அந்த நேரம் அந்த இடத்தில் டூவீலரில் கிராஸாகும் ஜான்விகா, அந்த டாக்டரைக் காப்பாற்றி அவரிடம் இருக்கும் பென் டிரைவரைக் கைப்பற்றிவிடுகிறார். இதையும் தெரிந்து கொண்ட சுதாகர் கும்பல் ஜான்விகாவையும் போட்டுத்தள்ள கடத்திக் கொண்டு போகிறது.

பரிசுஸ்ஸ்ஸ்ஸ்…ஸ்ப்பா இப்பவே கண்ணைக் கட்டுதேங்கிற ரேஞ்சுக்கு ஆகிட்டீகளா மக்களே?

எந்தத் துறையிலும் குறிப்பாக ராணுவத்திலும் பெண்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை பெண்களிடம் விதைக்க முயன்ற வகையில் டைரக்டர் கலா அல்லூரியைப் பாராட்டலாம். அதே போல் ராணுவத்தில் சேர்வதற்கான உயரமும் அளவான உடல்வாகும் ஜான்விகாவுக்கு நன்றாகவே மேட்ச் ஆகியிருக்கு. ஸ்டண்ட் சீன்களிலும் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். இவருக்காகவே ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளனர் கோட்டியும் இளங்கோவும்.

தனது மகள் ஜான்விகாவை பவர்ஃபுல் ஹீரோயினாக்க முயற்சி எடுத்திருக்கிறார் அவரது அம்மாவும் டைரக்டருமான கலா அல்லூரி. ஆனால் சீன்களின் சொதப்பலால் முயற்சி திருவினையாகவில்லை என்பது தான் உண்மை.

—    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.