பணிநிரந்தரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மௌனம் கலைக்க வேண்டும் – பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் அவர்களின் அறிக்கை : தேர்தலில் பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் நான்கு ஆண்டுகள் முடிய உள்ள நிலையிலும், அதற்கான  நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிநேர ஆசிரியர்களிடம் போராட்ட உணர்வு மேலோங்கி வருகிறது. பணிநிரந்தரம் வலியுறுத்தி நடந்து வருகின்ற போராட்டங்களையும், முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்பதால் பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் குமுறல் ஏற்பட்டுள்ளது.

மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் 2012ஆம் ஆண்டு முதல் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி 3700 பேர், ஓவியம் 3700 பேர், கணினி அறிவியல் 2 ஆயிரம் பேர், தையல் 1700 பேர், இசை 300 பேர், தோட்டக்கலை 20 பேர், கட்டிடக்கலை 60 பேர், வாழ்வியல்திறன் 200 பேர் என எட்டு பாடங்களில் மொத்தம் 12 ஆயிரம் பேர் தமிழக அரசின் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 13 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இதிலும் மே மாதம் சம்பளம், போனஸ் ஆண்டுதோறும் கிடையாது. வருங்கால வைப்பு தொகை, மருத்துவ காப்பீடு கிடையாது. பணிக்காலத்தில் இறக்கின்றவர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி கிடையாது.பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை கிடையாது. சம்பளம் தவிர அரசிடம் இருந்து பணப்பலன் கிடைப்பது கிடையாது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

இதனால் வாழ்வாதாரம், பணிப்பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஏழை விளிம்பு நிலையில் உள்ளவர்கள் தான் பெரும்பாலும் பணி புரிந்து வருகின்றார்கள். எனவே அனைவரின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் மேம்பட, தற்போதைய பகுதிநேர ஆசிரியர்கள் வேலையை முறைப்படுத்தி, காலமுறை சம்பளம் பணிநிரந்தரம் வழங்க வேண்டும்.

திமுகவின் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. எனவே, இதற்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுத்து, முதல்வர் ஸ்டாலின் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் நலன் கருதி, பணிநிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எதிர்கட்சியாக திமுக இருந்தபோது  அதிமுக ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதை முதல்வர் ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும். அதுபோல 100 நாளில் நிறைவேற்றுவேன் என பகுதிநேர ஆசிரியர்களிடம் உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி கன்னியாகுமரி மயிலாடுதுறையில் சொன்னதையும் முதல்வர் ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும்.

இனியும் பகுதிநேர ஆசிரியர்களை போராட்டத்திற்கு தள்ளாமல், முதல்வர் ஸ்டாலின் திமுக வாக்குறுதி 181-ல் சொன்னபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிாியர்கள் கூட்டமைப்பின்,  மாநில ஒருங்கிணைப்பாளர்  S.செந்தில்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

S.செந்தில்குமார் ,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.