திருச்சி கொள்ளிடம் ஆற்றைக் கடக்க  தினமும் அலறும் 50- கிராம மக்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி கொள்ளிடம் ஆற்றைக் கடக்க  தினமும் அலறும் 50- கிராம மக்கள் ! திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு ஆற்றைக் கடந்து செல்வதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, லால்குடிமற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள சுமார் 50-க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பள்ளி, கல்லூரி, அலுவல் மற்றும் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காக கொள்ளிடம் ஆற்றைக் கடந்துதான் சென்றாக வேண்டும்.

ஆற்றைக் கடந்து சென்றால் சில கிலோமீட்டர் தூரத்தில் கடந்துவிட முடியும். ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நாட்களில், ஊரைச் சுற்றி ஊர்வலம் சென்று போகுமிடம் செல்வதற்கும் பொழுது விடிந்துவிடும் கதைதான்.

அங்குசம் இதழ்..

கொள்ளிடம் ஆற்றின் கரை
கொள்ளிடம் ஆற்றின் கரை

காவிரி ஆற்றைக் கடப்பதற்கு போதுமான பாலங்கள் அமையப்பெற்றிருப்பதால், காவிரி ஆற்றங்கரையோர மக்கள் எளிதாக பயணிப்பதைப் போல, கொள்ளிடம் ஆற்றங்கரை மக்களின் இன்னலை தீர்க்கும் பொருட்டு புதிய மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

குறிப்பாக, காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்த கிராமமான கிளிக்கூடு முதல் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள லால்குடியையும் இணைக்கும் வரையில் புதிய பாலம் கட்டித்தர வேண்டுமென்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இன்று வரையில் அவை நிறைவேறா கோரிக்கையாகவே நீடித்து வருகிறது.

கொள்ளிடம் ஆற்றின் கரை
கொள்ளிடம் ஆற்றின் கரை

கொள்ளிடம் ஆற்றில் அமைந்த ரீச்சிலிருந்து மணல் அள்ளுவதற்காக, அவர்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட பாதையைப் பயன்படுத்தித்தான் மிகுந்த அபாயங்களுக்கு மத்தியில்தான் அன்றாடம் ஆற்றைக் கடந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இரவு ஆறு மணிக்கு மேல் பெண்கள் இந்தப் பகுதியை கடப்பது என்பது மிகுந்த அபாயம் நிறைந்தது. எந்நேரம் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தினூடே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் கடந்து செல்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய நிலையில், இந்த தற்காலிக பாதையும் சேதாரம் ஆனது. கரடு முரடான கல் பாதையாக மாறிப்பான இந்த பாதையைத் தாண்டித்தான் லால்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், கூலித்தொழிலாளிகள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது அன்றாடத் தேவைக்கு காந்தி மார்க்கெட் மற்றும் தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றின் கரை
கொள்ளிடம் ஆற்றின் கரை

இந்தப் பின்னணியிலிருந்துதான், ஆற்றங்கரையோர கிராமங்களுள் ஒன்றான இடையாற்று மங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து சேதமடைந்த மண் பாதையை ஒன்றுகூடி செப்பனிட்டிருக்கின்றனர்.

அமைச்சர் கே.என். நேருவிடம் முறையிட்டும், அவரும் அதிகாரிகளிடத்தில் பாதையை சரிசெய்து தருமாறு அறிவுறுத்தியிருந்தும் அதிகாரிகள் அலட்சியப்படுத்திவிட்டதாக வேதனை தெரிவிக்கிறார்கள். ”நாங்கள் என்ன தார்ச்சாலையா அமைத்துத்தரக் கேட்கிறோம். மண்ணைக் கொட்டி சாலையை சரி செய்து தரக்கூடாதா?” என கேள்வி எழுப்புகிறார்கள்.

கே.என்.நேரு..
கே.என்.நேரு..

ஊர்மக்கள் ஒன்றுகூடி செப்பனிட்ட இந்த மண் சாலையும்கூட, ஆற்றில் அடுத்து ஓடும் வெள்ளத்தில் மீண்டும் அடித்துச் செல்லப்படலாம். ஆகவே, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே நீடிக்கும் கிளிக்கூடு – இலால்குடி புதிய மேம்பாலம் கட்டித்தருவதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்கள், இக்கிராம மக்கள்.
மாவட்ட நிர்வாகமும், மாவட்டத்தின் அமைச்சரும் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமும்.

– ஆதிரன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.