அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசியலைப் புரிந்து கொள்ளாமல் கோரிக்கைகளை வெல்ல இயலாது !

ஓய்வூதியம் - குறு வரலாறு ! பாகம் – 04

திருச்சியில் அடகு நகையை விற்க

ஓய்வூதியம் என்ற கருத்தியல் முதல்முதலில் ரஷ்யாவில் தோன்றி, எப்படி உலகெங்கும் விரிந்தது என்பதை முதல் பாகத்திலும்; 2004 இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இரண்டாவது பாகத்திலும்: இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் CPS ரத்து செய்வது தொடர்பாக வல்லுநர் குழுவை அமைத்த முதல் மாநிலம் என்பதை மூன்றாம் பாகத்திலும்  பார்த்தோம்.

மேற்கு வங்காளத்தில் CPI (M) க்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் இன்றுவரை NPS திட்டத்தை மேற்குவங்காளத்தில் அமுல்படுத்தவில்லை. NPS மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் செயல்பட்டதுடன் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது மம்தாவின் செயல்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் NPS விசயத்தில் சொல்லும், செயலும் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஓய்வூதியம் - குறு வரலாறு !2016ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளா சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், NPS திட்டத்தை ரத்து செய்வோம் என்று CPI(M) கட்சி வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. 2016முதல் இன்றுவரை ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறார்கள். எட்டரை ஆண்டுகளாகத் தேர்தல் கால வாக்குறுதிப்படி NPS திட்டத்தைக் கேரளாவில் (PI(M) கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி) (LDF) ரத்து செய்யவில்லை. 2003 முதல் 2013 வரை NPS மசோதா சட்டமாக்க விடாமல் தடுத்து நிறுத்திய கட்சியான, NPS மசோதாவுக்கு எதிராக வாக்களித்த கட்சியானது CPI(M) என்பது குறிப்பிடத்தக்கது.

NPS திட்டத்தைச் சட்டமாக்கியது, திட்டத்தை வேகமாகப் பெரும்பான்மை மாநிலங்களில், அமுல்படுத்தியது காங்கிரஸ் கட்சி, 2014 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி படுதோல்வியைச் சந்தித்து வந்தது. அதன் விளைவு தான் காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு 2021ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தியது. PFRDAவில் இராஜஸ்தான் மாநில அரசு செலுத்திய அரசு ஊழியர் பங்கீடு மற்றும் அரசின் பங்கீட்டையும் திருப்பித் தர வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில அரசு PFRDAவுக்கு கடிதம் அனுப்பியது. இராஜஸ்தானுக்கு முன்பே NPS ரத்து செய்ய வாய்ப்பு இருந்தும் இன்று வரை NPS கேரளா ஏன் ரத்து செய்யவில்லை என்பது தொழிலாளர் இயக்கத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

முதல்வர் பிறந்தநாள்

ஓய்வூதியம் - குறு வரலாறு !ராஜஸ்தானைத் தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆண்ட ஜார்கண்ட், காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் NPS திட்டம் ரத்து செய்யப்பட்டுப் பழைய ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. ராஜஸ்தானைத் தொடர்ந்து ஆம்ஆத்மி ஆளும் பஞ்சாப் BJP ஆளும் கோவா போன்ற மாநிலங்களும் NPS திட்டத்தை ரத்து செய்ய உள்ளோம் என அறிவித்தது. 2021 2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் CPS ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி எண் 309 மூலம் திமுக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. இன்று வரை CPS ஐ ஏன் ரத்து செய்யவில்லை.

இது போன்ற அறிவிப்புகளால் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளிகள் நெருக்கடிக்கு உள்ளானார்கள். அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பங்குச் சந்தை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. வரலாற்று சக்கரம் பின்னோக்கிச் செல்லாது என்று பேசிய பொருளாதார மேதைகளும் அதிகாரிகள் கூட்டமும் கதிகலங்கிப் போனார்கள். அரசு நிரந்தரம், ஆட்சியாளர்கள் மாறுதலுக்கு உட்பட்டவர்கள்! இப்போதுள்ள அரசு எந்திரம் முதலாளிகள் நலனுக்காக அமைக்கப்பட்டது. கொள்கை ரீதியாக இடதுசாரி கட்சிகள் தவிரக் காங்கிரஸ், பிஜேபி திமுக அதிமுக போன்ற கட்சிகள் முதலாளிகள் நலனுக்குக் கொள்கை அடிப்படையில் ஆதரவாகச் செயல்படுபவர்கள். எனவே இது தவிர்க்க முடியாது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து எப்போது? எல்லாவற்றையும் தீர்மானிப்பது, அரசியல். அரசியலைத் தொழிலாளர் தொடர்பான அரசியலைப் புரிந்து கொள்ளாமல் கோரிக்கைகளை வெல்ல இயலாது. ஏனெனில் லெனின் வார்த்தைகளில் அரசு என்பது ஓர் ஒடுக்குமுறை கருவி-ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், இமாச்சல் போன்று தேர்தலுக்கு முந்தைய காலம் ஆட்சியாளர்களுக்குப் பலவீனமான காலகட்டம். அவர்களின் பலவீனமான காலகட்டத்தில் பலமாகப் போராடினால் கோரிக்கைகளை வெல்லமுடியும் என்பது வெற்று வார்த்தை அல்ல. வரலாறு, அரசியல் வரலாறு, முன்னுதாரணம்- தமிழ்நாட்டின் 2003 போராட்டம்.

ஒன்றுபட்டு, நின்று சிறை வாழ்க்கை போன்ற தியாகங்களுக்கும் தயாராகி உறுதியோடு போராடினால் மீண்டும் பழைய ஓய்வூதியத்தைப் பெறலாம்.

(முற்றும்)

பா.பார்த்தசாரதி,

புரவலர்,

அகில இந்திய ஓய்வு பெற்ற பல்கலைக்கழக,

கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFRUCTO)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.