வானிலை கணிப்பை மீறி வட தமிழகத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி !
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பை பொய்ப்பிக்கும் வகையில், வட தமிழகத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் லேசான மழை பெய்தது.
வானிலை கணிப்பை மீறி வட தமிழகத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி !
சேலம் மற்றும் திருப்புத்தூர் மாவட்டங்களில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.
“ தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
01.04.2024: தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
02.04.2024: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.“ என்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பை பொய்ப்பிக்கும் வகையில், வட தமிழகத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் லேசான மழை பெய்தது.
மணிகண்டன்