பன்றிகளை தீயிட்டு கொளுத்தும் உரக்கிடங்கு! ஆழ்ந்த உறக்கத்தில் நகராட்சி நிர்வாகம் !
பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கில் 10க்கும் மேற்பட்ட இறந்த பன்றிகளை தீயிட்டு கொளுத்தும் அவலம்…..
பன்றி வளர்ப்போருக்கு ஆதரவாக பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தினர் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு …
ஆழ்ந்த நித்திரையில் உள்ள பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கண் விழிப்பாரா ???
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு பாரம்பரிய மிக்க நகராட்சியாகும் . மொத்தம் 30 வார்டுகளை கொண்ட நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து கையாள்வதற்கான பெரியகுளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கு அமைக்கப்பட்டு தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி வாகனங்களில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கொட்டி குப்பைகளை சேமித்து வருகின்றனர். அவ்வப்போது நகராட்சி உரக்கிடங்கில் தீ வைக்க படுவதால் அந்த பகுதியை சுற்றி உள்ள பொதுமக்கள் பல்வேறு நோய் தோற்றுக்கு ஆளாகி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நகராட்சி உரக்கிடங்கில் நோய் வாய்ப்பட்டு இறந்த 10 க்கும் மேற்பட்ட பன்றிகளை உரக்கிடங்கில் எரிக்கப்படும் குப்பைகளின் மேல் கொட்டி தீயிட்டு எறித்து வருகின்றனர். இதனால் அதிகளவில் துறுநாற்றம் விசுவதுடன் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது போன்று அடிக்கடி இறந்த பிராணிகளின் உடலும், பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சி கூட்டங்களில் வெளியேற்றப்படும் எலும்புகளையும் இது போன்று கொட்டி தீயிட்டு நகராட்சி ஊழியர்கள் அட்டூழியம் செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர், தலைவர், சுகாதார ஆய்வாளர் அசன் முகமது உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளமால் இது போன்ற செயல்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் பொதுமக்கள் நலன் காக்க தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டு இத்தகைய செயலுக்கு காரணமானவர்கள், அதற்க்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் என அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.