சினிமாவுக்கே போகாத பெரியார் தான் தமிழ் சினிமாவை அதிகம்……

0

பெரியார் வளர்கிறார்

தமிழ்நாட்டின் வரலாறை
யார் எழுதினாலும்,
பெ.மு-பெ.பி என்றுதான்
எழுதவேண்டிவரும்.
அதாவது பெரியாருக்கு முன்
பெரியாருக்குப் பின்.

அவரின் பெரியபலம் சுய சிந்தனை

ஒரு உதாரணம் – எல்லா திருமணங்களையும் 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும் என்கிறார்.
அதாவது Driving License போல.
எவராவது இப்படி யோசித்தது உண்டா? அதுதான் அவர்.

தாட்சண்யம் இல்லாமல் கருத்து சொல்வது அவர் ஸ்டைல்.
பிரமிள் போன்ற சிந்தனாவாதிகள் அதிசயித்துப் போய், இப்படியான தலைவர்கள் இந்தியாவிலேயே
சிலர்தான் என்றார்கள்.

சினிமாவுக்கே போகாத பெரியார் தான் தமிழ் சினிமாவை அதிகம் பாதித்து மடைமாற்றம்
செய்தவர்.

த.நா க்குள் முதல் முறையாக
கம்ப்யூட்டர் வந்தபோது
அந்த நவீன வரவை பார்ப்பதற்குப் போன தமிழ்நாட்டின் முதல் தலைவர்
அவர்தான். எந்தப் புதுமையையும் கற்கும் ஆர்வம்.

எனது சமீபத்திய நிகழ்ச்சிகளில், கடவுளை கும்பிடுபவர்களை கை உயர்த்தச் சொல்வேன். எல்லாரும் கை உயர்த்துவார்கள். பெரியாரைப் பிடிக்கும் என்பவர்களை அடுத்து கை உயர்த்தச் சொல்வேன். அதைவிட அதிகமானவர்கள் உயர்த்துவார்கள். இதுதான் பெரியாரின் த.நாட்டின் இடம்.
சங்கிகளுக்குப் புரியாத இடமும் இதுதான்.

அவர் கடவுளை மறுத்தது மனிதனை உயர்த்த.

-நந்தலாலா

Leave A Reply

Your email address will not be published.