‘பருத்திவீரன்’ சரவணன் கட்டிய பிள்ளையார் கோவில்!

0

இப்போது தமிழ் சினிமாவிலும் வெப் சீரிஸ் ஏரியாக்களிலும் பிஸியான கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் வில்லனாகவும் அசத்தி வருகிறார் ‘பருத்திவீரன்’ சரவணன். இவருக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமம்.

பிள்ளையார் கோவில்!அங்கே உள்ள தனது தோட்டத்தில் இருக்கும் பிள்ளையாரால் தான் தனக்கு இவ்வளவு வாய்ப்புகளும் வசதிகளும் என பரிபூரணமாக நம்புகிறார் சரவணன். எனவே சிறு கோவிலில் இருந்த அந்த பிள்ளையாருக்கு ‘அருள்மிகு ஸ்ரீவெற்றி விநாயகர்’ என  பெரிய அளவில் கோவில் கட்டி வருகிற 27—ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடத்தப் போகிறார். அதே நாளில் ‘சேலம் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் ஃபேக்டரி’ என்ற பெயரில் படப்பிடிப்புத் தளத்துடன் கூடிய ஸ்டுடியோவையும் திறக்கவுள்ளார் சரவணன்.

 

—   மதுரை மாறன்

Leave A Reply

Your email address will not be published.