விபத்து போல காரை மோதி கொல்ல திட்டம் ! சொதப்பியதால், அரிவாளால் வெட்டி கொன்ற கும்பல் !
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவருடைடைய மகன் சங்கிலி பாண்டி (29). இவர் கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் மார்ச்-31அன்று தனது வீட்டில் இருந்து கடம்பூருக்கு தனது மோட்டார் பைக்கில் கடம்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த ஒரு கார் மோதியுள்ளது.

இதில் நிலை தடுமாறிய சங்கிலிபாண்டி அங்குள்ள காட்டுபகுதியில் விழுந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய சிலர் சங்கிலிபாண்டியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்தில் சங்கிலிபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது குறித்து தகவல் கிடைத்தும் கயத்தார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கிலிபாண்டி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காரையும் பறிமுதல் செய்தனர். முன்விரோதம் காரணமாக சங்கிலிபாண்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரை ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து போல சித்திரிக்க முயற்சி செய்துள்ளனர். கார் மோதியும் சங்கிலிபாண்டி இறக்கவில்லை என்பதால், அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
— மணிபாரதி.