உழைப்பின் உயர்வு
தபாலில் வேலை
வருமா
ஜன்னலை திறந்தேன்
அழகியல் காற்றாய்
அழகிய இயற்க்கை
தோட்டத்தில்
இதயத்தை
தொட்ட மங்கை
தென்றல்
மனது நீரோடையாய்
அதில் கண்
விழுந்த பார்வையில்
கலக்கமாகி
கற்பனையில்
நான்
வாசலில் பெல்
சத்தம்
கொரியரில்
வேலை வாய்ப்போ
வாசல் கதவை
திறந்தேன்
அப்பா
குனிந்த தலையுடன்
செலவுக்கு
பணம் என்றேன்
உழைத்ததை
மேலே உழைக்காததை
கீழேயும்
பணம் பெற்றேன்
உழைப்பின்
உயர்வு
உயரம்தான்
— தஞ்சை ஹேமலதா
Comments are closed, but trackbacks and pingbacks are open.