கவிஞர் செவ்வியன் மறைந்தார் !
கவிஞர் செவ்வியன் மறைந்தார் ! T. குப்புசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் செவ்வியன் இன்று (02.08.2024) காலை திருப்பூரில் தனது மகன் கரிகாலன் அவர்கள் இல்லத்தில் காலமானார்.
அவரின் உடல் அவர் மிகவும் நேசித்த அவரின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
நாளை 03.08.2024 அவரின் இறுதி நிகழ்வுகள் ஆம்பலாப்பட்டில் நடைபெறுகிறது.
சிங்கப்பூர் தமிழர் வரலாறு, சேதி சொல்லும் தேதி உள்ளிட்ட பல படைப்புகளைத் தந்த கவிஞர் செவ்வியன் அவர்கள் திருவள்ளுவர் வாழ்வில் மன்றத்தைத் தொடங்கி திருக்குறளை வாழ்வியலாக ஏற்று சமத்துவமான சமூகத்தைக் கட்டமைக்கப் பாடுபட்டார்.
பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழைப் பயிற்று மொழியாக்கிட பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
தமிழைப் பயிற்று மொழியாக்க நூற தமிழ்ச் சான்றோர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியபோது அந்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்றவர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2012 யில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஆகில இந்திய கல்வி மாநாடு நடத்திய காலத்தில் அமைப்பின் பொருளாளராக இருந்து மாநாட்டின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.
கவிஞர் செவ்வியன் அவர்களின் இறப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் இழப்பாகும்.
கவிஞர் செவ்வியன் அவர்களுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம்.
அவரை பிரிந்து தவிக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள; மகன் கரிகாலன் எண்: 92443 84314 ; மருமகன் இளங்கோவன்: 94440 73144.
தகவல்:
முனைவர் பி. இரத்தினசபாபதி
தலைவர்
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை