காவலர் தினம், சிறந்த காவல் நிலைய விருதுகள் …! மகிழ்ச்சி கடலில் திருப்பத்தூர், தர்மபுரி கிருஷ்ணகிரி காவலர்கள் ..!
முதல்முறையாக காவலர் தினம் கொண்டாட வைத்து சிறந்த காவல் நிலையங்களுக்கான கேடயங்களை வழங்கி தமிழ்நாடு காவலர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு.
1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் “காவலர் நாள்” ஆக கொண்டாடப்படுமென , தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 29.4.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் . அரசாணை (எண்.314 உள்- காவல்.8 துறை நாள்.24.6.2025-) வெளிட்டார்.
அதன்படி 2026 ஆண்டுக்கான முதல் “காவலர் நாள் ” தமிழ்நாடு முழுவதுமுள்ள , அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளடக்கி மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் ” 6 ந்ததேதி” காவலர் தினம் கொண்டாடப்பட்டது.
அதன்படி , திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள காவல் துறை அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் காவலர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
*திருப்பத்தூர்*
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களை போற்றும் விதமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மலர்தூவி வீரவணக்கம் செலுத்தனார்.
இதனைத்தொடர்ந்து ஆசிரியர் நகரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர் தினம் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
*தர்மபுரி*
தருமபுரி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் “காவலர் தினம்” கொண்டாடப்பட்டது. இதில், முன்னதாக தருமபுரி மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த போலீசார் நினைவாக, வைக்கப்பட்ட நினைவு தூணுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள், பாலசுப்ரமணியமன், K.ஸ்ரீதரன், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சக்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து ஆயுதப்படை சார்பில் ஏற்பாடு செய்யபட்ட காவல்துறை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் துப்பாக்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் காவல்துறையினர் பயன்படுத்தும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் காட்சிப்படுத்தபட்டன ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி துப்பாக்கிகள் குறித்து, கண்காட்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளித்தார்.
அதனை தொடர்ந்து, காவல்துறையினர் குடும்பங்களுக்கு ஆயுதப்படை திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாமை காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சிறந்த காவல் நிலையங்கள்
தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக 48 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது , அதில் திருப்பத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன். தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலையம். கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை தேர்வு பட்டியலில் இடம்பிடித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் கேடயத்தை காவலர் தினம் நாளான 06.09.2025 சென்னையில் உள்ள தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் வெங்கட்ராமன்,இ.கா.ப., கேடயங்களை வழங்கி கவுரவித்திருந்தார்.
திருப்பத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன். அரூர் காவல் நிலையம். கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் காவல் நிலை ஆய்வாளர்கள் மற்றும் இவர்களுக்கு துணை நின்ற அந்தந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் .
எழுச்சியோடு நடந்தேறிய காவலர் நாள்’ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: 1859ம் ஆண்டு மதராஸ் மாவட்டக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான செப். 6, காவலர் நாள் கொண்டாடப்படும் என இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தேன். அதன்படி, பதக்கங்கள் வழங்குதல், ரத்த தான முகாம்கள் எனத் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடந்தேறியது இந்த ஆண்டுக்கான முதல் காவலர் நாள் என வாழ்த்தி மகிழ்ந்துள்ளார்.
— மணிகண்டன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.