அரசியல் செய்யாமல் அவியல் செய்ய வேண்டுமா என்று கேட்ட முதல்வர் தானே? – மதுரையில் குஷ்பு காட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையை கண்டித்து,  தமிழக பாஜக மகளிர் சார்பில் ஜனவரி-03 அன்று மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ”இந்த பேரணிக்கு அனுமதி கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

திமுக ஆட்சிக்கு எதிராக, திமுகவின் தவறான செயல்களை எதிர்த்து யார் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் எங்களுக்கு எங்குமே அனுமதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு காரணம் எதைப் பேசினாலும் உண்மையை மட்டும் தான் பேசுவோம் என திமுகவிற்கும் நன்றாகவே தெரியும். எனவே அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

பேரணி, ஆர்ப்பாட்டம் என் மண்ணில், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை இன்று மக்கள் காது கொடுத்துக் கேட்கிறார்கள். நாங்கள் சொல்வதை கேட்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

அதற்கு முன்னதாக,  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், ”திமுக ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை கைநீட்டி காட்டினாலே அவர்களை கைது செய்வதும், வழக்கு பதிவு செய்வது மட்டும்தான் தமிழகத்தில் நடைபெறுகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பள்ளிக்காக 44 ஆயிரம் கோடி செலவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். அதை செய்தார்களா? அதற்கு சாட்டை எடுத்து அடிக்கட்டுமா? அவருக்கு தைரியம் உள்ளது. திமுகவில் பேசினார்களா?

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பேரணி, ஆர்ப்பாட்டம் நிச்சயமாக இதில் யாரும் அரசியல் செய்யவில்லை. நீதிமன்றம் சொல்லியிருப்பதால் இதற்கு பேச முடியாது. அது நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும். நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் போராடுகிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் திமுக விரைவில் போராட்டம் நடத்தியதும், நாடாளுமன்றத்தில் பேசியதும், சட்டசபையில் பேசியதும் விளம்பரத்திறகாக செய்த திமுக தானே அது. அரசியல் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அரசியல் செய்யாமல் அவியல் செய்ய வேண்டுமா என்று கேட்ட முதல்வர் தானே இவர். நீங்கள் அவியல் செய்யும்போது தற்போது நாங்கள் கேட்டால் மட்டும் அது அரசியல் என்றால் ஜனநாயக ரீதியாக இது எப்படி நியாயம்.

பேரணி, ஆர்ப்பாட்டம் மக்களை திசை திருப்புவதற்காக பேசக்கூடாது. மணிப்பூர் பிரச்சனையும் பாலியல் விவகாரமும் ஒன்று கிடையாது. மணிப்பூரில் எல்லை மீறிய பிரச்சனைகள் உள்ளது. அது கூட தெரியாமல் திமுகவினர் பேசுகிறார்கள் என்றால் அவர்கள் எதுக்கு அரசியலில் இருக்கிறார்கள். அரசியல் தெரியாமல் இப்படி கேள்வி கேட்டால் நான் சிரிக்க தான் செய்வேன். சந்தேஷ்கல்லியிலும், புதுக்கோட்டையிலும் ஏன் குரல் கொடுக்கவில்லை?

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் கூட்டணி ஆளுகின்ற இடங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் சந்தேஷ்கலிக்காக குரல் கொடுத்தாரா? மணிப்பூரில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பது தெரியாமல் முதல்வர் ஸ்டாலினோ, திமுகவினரோ, காங்கிரஸ் கட்சியினரோ இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது. ” என்பதாக அதிரடியாக பேசி சென்றிருக்கிறார், குஷ்பு.

 

 —   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.