கோடை விடுறைக்கு பிறகு திரும்பு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு – செண்டை மேளம் என அசத்திய பள்ளி !
கோடை விடுறைக்கு பிறகு திரும்பு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு – செண்டை மேளம் என அசத்திய பள்ளி !
கோடை விடுமறை முடிவடைந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று தொடங்கின. காலை முதல் மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த வண்ணம் உள்ளனர். பழைய மாணவர்கள் தங்களது நண்பர்களை சுமார் ஒன்றரை மாதத்திற்குப்பின் சந்திக்கும் மகிழ்ச்சியுடனும், புதிய மாணவர்கள் புது இடங்கள் எப்படி இருக்கும் என்று நினைத்தவாறும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அத்துடன் இலவச புத்தகங்களையும் வழங்கினார். மாணவ- மாணவிகளுக்கு இன்றே இலவச புத்தகம், சீருடைகளை வழங்குவது பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதே போன்று திருச்சியில் ,பொன்னையா மேல்நிலைப்பள்ளி … மீண்டும் இன்று திறக்கும் பள்ளிக்கு வருகை புரியும் மாணவ மாணவிகளை கேரள செண்டை மேளம் முழங்க ஆசிரியர்கள் அணிவகுப்புடன் இனிப்புகள் வழங்கி தன் பள்ளி மாணவ மாணவர்களை வருக வருக என வரவேற்கும் காட்சி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. சிறப்பான பள்ளி நிர்வாகத்தின் முயற்சிக்கு பெற்றோர் மட்டும் இப்பகுதி மக்களின் வாழ்த்துக்கள்…