பூஜையுடன் தொடங்கியது ‘பூக்கி’
’விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் ‘பூக்கி’ என்ற படத்தின் பூஜையும் ஷூட்டிங்கும் செப்டம்பர்.02-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. விஜய் ஆண்டனியின் ‘சலீம்’, வசந்தபாலனின் ‘ஜெயில்’ படங்களின் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இந்த ‘பூக்கி’ மூலம் டைரக்டராக புரமோட் ஆகிறார்.
ஒளிப்பதிவும் அவரே. ‘மார்கன்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் அறிமுகமான அஜய் திஷன் இதில் தனி ஹீரோவாக புரமோட் ஆகிறார். ஹீரோயினாக தனுஷா, மற்ற கேரக்டர்களில் பாண்டியராஜன், சுனில், இந்துமதி, மணிகண்டன், விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷர்மி, பிரியங்கா ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தின் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, இப்படத்தில் இசையை மட்டும் கவனிக்கிறார். ஒரே ஷெட்யூலில் சென்னையிலும் பெங்களூருவிலும் ஷூட்டிங்கை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
02—ஆம் தேதி நடந்த பூஜையில் டைரக்டர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், ‘ஓஹோ எந்தன் பேபி’ ஹீரோ ருத்ரா, கேமராமேன் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
’இந்த டிஜிட்டல் யுகத்தின் லவ்வர்ஸ் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் கொஞ்சல் வார்த்தை தான் ‘பூக்கி’, அதையே டைட்டிலாக வச்சுட்டேன்” என்கிறார் ஒளிப்பதிவாளரும் டைரக்டருமான கணேஷ் சந்திரா.
— மதுரை மாறன்