எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து இத்தனை வகையான போஸ்டர்களா ? படங்கள்….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை மாநாட்டிற்கு வருகை தரும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மற்றும் திருச்சி, சிவகங்கையில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் முக்குலத்தூர் எழுச்சிக்கழகம் சார்பில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

போஸ்டர்களில் தென்மாவட்டத்தை அதிகளவு நேசிக்கும் முக்குலத்தாருக்கும், சிறுபான்மையினருக்கு 10.5 இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தையும் செய்யாத எடப்பாடி பழனிசாமி தற்போது மாநாட்டிற்கு மட்டும் முக்குலத்தோரை அழைக்கும் வண்ணம் மதுரை மாநகரில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். திருப்புவனம் பகுதியில் இரவு முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை, அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் கிழித்துள்ளனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இதனை கண்டித்து முக்குலத்தூர் எழுச்சிக்கழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்தபோது முக்குலத்தாருக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை முக்குலத்தூர் நீண்ட கால கோரிக்கையான 10.05 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பழனிச்சாமி மதுரையில் மாநாடு நடத்தி அதில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள பார்க்கிறார் என்றும் இதற்கு தென் மாவட்டம் முக்குலத்தூர் சமூக மக்கள் யாரும் ஒத்துழைக்கமாட்டார்கள் எனவும் கூறியுள்ளனர். இடஒதுக்கீடு எதையும் செய்யாத எடப்பாடி பழனிசாமி மதுரை நகருக்குள் நுழையக்கூடாது என்றும் போஸ்டர்களில் கண்டித்து ஒட்டியுள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.