கோழிகள் வாடகை விடுவது பற்றி கேள்விப்பட்டது உண்டா?
பொதுவாக நம் அனைவரும் வீடுகள் மற்றும் வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் எங்கேயாவது கோழி வாடகை விடப்படுவது பற்றி கேள்விப்பட்டது உண்டா? ஆம் இது போன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது. தற்போது அங்கு கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்ப்பது என்பது மிகவும் பிரபலமாகி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பல கோழிப் பண்ணைகளில் தொற்றுநோய் பரவல் ஏற்பட்டது. இதனையடுத்து 166 பில்லியன் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டன. அப்போது முட்டையின் விலை சராசரியாக 1.93 டாலராக இருந்தது. ஆனால் அதுவே ஜனவரி 2023 இல் அது இரு மடங்குகளாக அதிகரித்து 4.82 டாலராக உயர்ந்துள்ளது.
இருப்பினும் தற்போது வரை சிகாகோ, நியூயார்க் மற்றும் சான் பிரான்சிகோ போன்ற நாட்டின் சில பகுதிகளில் முட்டைகளின் சில்லறை விலை $4.95 முதல் $10 வரையிலும் அல்லது அதற்கு அதிகமாகவே உள்ளது. இதனைத் தடுக்க அமெரிக்கா வேளாண் துறை சில யுத்திகளை வழங்கியது. இதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரண நிதியும், தடுப்பூசி ஆராய்ச்சிக்காக சில நிதியையும் ஒதுக்கியது. எனினும் முட்டையின் சராசரி விலை 41% அதிகமாக இருந்தது. இந்த நெருக்கடியை தடுக்க சில நிறுவனங்கள் கோழிகளை வாடகைக்குவிட முடிவு செய்தது.
எனவே கோழிகளைப் பராமரிப்பதற்கான புத்தகம், அதற்கான பயிற்சி, தீவனம் போன்றவை குறித்துத் தொலைபேசித் தகவல்களும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஒரு ஆரோக்கியமான கோழி வாரத்திற்கு ஐந்து முட்டை வரை இடும் இதனால் இந்த நெருக்கடி குறையும் என்று மக்கள் நம்புகின்றனர்.
இது குறித்து அமெரிக்காவின் உள்ளூர் மக்கள் கூறுகையில், இது ஒரு நீண்ட கால பராமரிப்பு இல்லை என்றும் குறுகிய காலத்தில், இதுபோன்ற சேவைகளை தங்களால் அணுக முடியும் என்று கூறுகின்றனர். ஆனால் கோழி வளர்ப்பு என்பது குறைந்த பராமரிப்பு என்பதால் இதனை விரும்பி செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
— மு. குபேரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.