அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிரபாஸின்– ‘தி ராஜா சாப்’ டிரெய்லர் ரிலீஸ் கோலாகலம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

தெலுங்கு சினிமாவின் ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள’தி ராஜா சாப்’படம் 2026 ஜனவரி 09-ஆம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அதனால் இந்த செப்டம்பர் 29-ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் படத்தின் டிரெய்லர்  மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின்  டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.

படம்  குறித்து இயக்குநர் மாருதி

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே. பிரபாஸ் தனது திரை ஆளுமையாலும், தனித்துவ நடிப்புத் திறமையாலும் வேடத்தை சிறப்பாகக் கொண்டு சென்றுள்ளார்.

தி ராஜா சாப்'
தி ராஜா சாப்’

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சமீபத்தில் முடிந்த இன்ட்ரோ பாடல் எனக்குப் பெரும் அனுபவமாக இருந்தது – அதை  நீங்கள் டார்லிங் ரெபெல் ஸ்டாருக்கான அன்பாகக் கருதினாலும், டைட்டில் பாடலாக கருதினாலும்  அது எங்கள் இதயத்திலிருந்து உருவாகி வந்தது.”என்றார்.

தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத்

“இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் செட் உருவாக்கியதிலிருந்து, ரெபல் ஸ்டார் பிரபாஸை முன்னணியில் வைத்து சக்திவாய்ந்த நடிகர் பட்டாளத்தை அமைத்தது வரை, எங்கள் குறிக்கோள் மறக்க முடியாத பான்-இந்திய அனுபவத்தை தர வேண்டும் என்பதே. டிரெய்லருக்கான ரசிகர்களின் பெரும் வரவேற்பு, எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது கொண்டாட்டத்தின் தொடக்கம் மட்டுமே.” என்கிறார்.

பிரபாஸுடன் சஞ்சய் தத், பொம்மன் இரானி, சரினா வாஹாப், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர்  இணைந்து நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் எஸ் இசையமைத்துள்ளார்.

 

— ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.