டாப் கியரில் பயணிக்கும் பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கு !
டாப் கியரில் பயணிக்கும் பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கு!
பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில், உரிமையாளர் மதன் செல்வராஜை 8 நாள் போலீசு காவலில் எடுத்து விசாரணையை நடத்தி முடித்திருக்கின்றனர். விசாரணை யில் அவர் அளித்திருக்கும் தகவலின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத் திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இதுவரை 68 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி புகார்கள் வந்திருப்பதாக சொல் கிறார்கள். ஒரே நபர் இரண்டு மாவட்டங்களில் புகார் கொடுத்திருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சிலர் புகார் கொடுக்காமல் இருப்பதற் கான வாய்ப்புகளும் இருக்கிறது. கைப்பிரதியாக பெறப்பபட்ட புகார்களை கணிணியில் பதிவு செய்தபிறகே, மோசடியின் உண்மையான மதிப்பு தெரியவரும் என்கிறார்கள்.
பிரணவ் மோசடி வழக்கைப் பொருத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு, அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்திலேயே புகார் அளிக்கலாம் என்ற வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். இதன் காரணமாக, கூடுமான வரையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே பொருளாதாரக்குற்றப்பிரிவில் புகார் தந்தி ருக்கிறார்கள் என்கிறார்கள். அடுத்து, பெரும் பாலான பணத்தை நிலத்தில் முதலீடு செய்தி ருப்பதாலும் அந்த சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்குரிய இழப்பீட்டை ஒப்படைப்பதிலும் சிக்கல் எழ வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.
பெரும்பாலான சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து கடனாக பெற்றிருப்பதால், அவற்றை கைப்பற்றுவதில் உள்ள சட்ட சிக்கல்கள் மற்றும் புகார்தாரர்களை தனித்தனியாக அழைத்து விசாரிப்பது; தரவுகளை கணிணிமயமாக்குவது என கடுமையான வேலையை வாங்கி வருவதாக தெரிவிக்கிறார்கள் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு வட்டாரத்தில்.
போதுமான அலுவலக சூழல் இல்லாத நிலையிலும்கூட, பள்ளிக்கூட பசங்க இம்போசிசன் எழுதுவதை போல, பாவம் பெண் போலீசார்கள் பக்கம் பக்கமாக வழக்கு தொடர்பான ஆவணப்படுத்தல் வேலைகளை செய்து வருவதை நாமே கண்கூடாக காண நேர்ந்தது.
பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு வரலாற்றில் குறைந்தது பத்து வருடங்களில் எந்த ஒரு வழக்கும் அதன் இறுதித்தீர்வை எட்டியதில்லை என்கிறார்கள். ஆனாலும், பிரணவ் வழக்கைப் பொருத்தவரையில், வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தொடக்கம் முதலாகவே காட்டிவரும் வேகத்தைப் பார்த்தால், எண்ணி ஒரு வருடத்திற்குள் இந்த வழக்கில் இலக்கை எட்டிவிடுவார் என்கிறார்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு வட்டாரத்தில்.
=அங்குசம் புலனாய்வு குழு