பிரின்ஸ் பிக்சர்ஸ் + கவின் + ராம்சங்கையாவின் புதுப்படம் ஆரம்பம்!
மெகா பட்ஜெட் படங்கள், சின்ன பட்ஜெட்டில் சூப்பர் கண்டெண்ட் படங்கள் என பேலன்ஸ்டு புரொடக்ஷன் ஹவுஸாக ஜொலிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸின் புதுப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இதே பிரின்ஸ் பிக்சர்ஸில் ‘தண்டட்டி’ படத்தை டைரக்ட் பண்ணிய ராம்சங்கையா தான் இப்படத்திற்கும் டைரக்டர்.
“நமோ நாராயணா” என மனமுருக வேண்டி படத்தை ஆரம்பித்துள்ளார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண்குமாரும் இணைத் தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷும். படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள், டெக்னீஷியன்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும்.
— மதுரை மாறன்