சிறை காவலர்களுக்கு இருண்ட காலம் ! காரணம் அந்த அதிகாரிதான் ! கதறும் பெண் சிறைக்காவலர் !
சிறைத்துறைக்கு இது போதாத காலம் போல. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் சிறையில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்த சரஸ்வதி என்பவர், சிறைக்கைதிகளால் தாக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதைவிட, இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்து அந்த தலைமைக்காவலரே ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ஒரு கனம் நிலைகுலையை வைக்கிறது.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு கைதிகள் சிறையில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும்; அதற்கு ஒரு குறிப்பிட்ட அதிகாரி ஆதரவாக இருந்து வருவதாகவும்; அவர்கள் சிறைக்குள் செல்போன் பயன்படுத்துவதையும், விதிமீறல்களில் ஈடுபடுவதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் மட்டுமே காலம் தள்ள முடியும் என்றும் மாறாக சட்டப்படியான கடமையை செய்தால் தனக்கு நேர்ந்த கதிதான் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
அவர் குற்றஞ்சாட்டும் அந்த அதிகாரி, ஒட்டுமொத்த சிறைத்துறைக்கே தலைமை பொறுப்பு வகிக்கும் ஏடிஜிபி மகேஷ்வர்தயாள் என்பதுதான் இதில் கிறுகிறுக்க வைக்கும் செய்தி. என்னதான் நடக்கிறது, சிறைத்துறையில்?
விரிவாக அலசுகிறது, அங்குசம் ஆடுகளம்.
முழுமையான வீடியோவை காண
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம் ! காரணம் அந்த அதிகாரிதான் ! கதறும் பெண் காவலர் !
— அங்குசம் சிறப்பு செய்தியாளர் குழு.