அந்த இரண்டு ஊழல் பெருச்சாளி நீதிபதிகள்தான் … ஜெயிலில் இருந்து யுவராஜ் மிரட்டல் கடிதம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கோகுல்ராஜ் ஆவணப்படுகொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக, வழக்கை எதிர்கொண்டு வாழ்நாள் ஆயுள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் பெயரில் வெளியாகியுள்ள முகநூல் பதிவு சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

யுவராஜ் கவுண்டர் என்ற பெயரில் செயல்படும் முகநூல் பக்கத்திலும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் பொதுச்செயலாளராக செயல்படும் அவரது மனைவி சுவிதா-வின் முகநூல் பக்கத்திலும் இதுபோன்ற கடிதங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள யுவராஜ், எப்படி எந்தவிதமான சிறைத்தணிக்கையும் இல்லாமல், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட முடிகிறது? என்ற கேள்வி எழுகிறது.

”போராட்ட களத்திற்கான முதல்படி” என்ற தலைப்பில், ஆக-30 அன்றைய தேதியிட்டு வெளியாகியுள்ள பதிவில்,

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

“எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு, சிலதில் தானே ஏற்படும், சிலவற்றில் ஏற்பட வைக்க வேண்டும், நமக்குள்ள பிரச்சனை *’சட்டவிரோதமான சிறைவாசம்’* ஆகும், எந்த குற்றமுமே நடக்கவில்லை என்பதை வழக்கு ஆவணம் சொல்கிறது, ஆனால் தீர்ப்பு எழுதிய ஊழல் நீதிபதி T.சம்பத்குமார் அவர்களது கண்களுக்கு எந்த தாள்கள் கண்முன் நின்று ஆசைகாட்டியதோ தெரியவில்லை தண்டனை தீர்ப்பை எழுதினார், இதன் மீதான மேல்முறையீட்டில் நேர்மையான நீதியரசர்கள் விலகி சென்றதன் மர்மமும் ஊழல் நீதியரசர் N.ஆனந்தவெங்கடேஷ் 9 மாதம் தனி சிறப்பு அமர்வாக விசாரித்து அனைவரும் சட்டவிரோத காவலில் உள்ளனர் என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டே தண்டனையை உறுதி செய்தார்.

எந்த தைரியத்தில் இந்த இரண்டு ஊழல் பெருச்சாளிகளும் நிரபராதிகளுக்கு தண்டனை கொடுத்தனர்? கேட்க நாதியில்லை என்று தானே? இந்த இரண்டு ஊழல் பெருச்சாளிகளும் மிக வலுவான சட்டசங்கிலியில் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டன [தகவல்கள் முழுமையாக வெளியிடப்படாமல் உள்ளன] என்பது மக்களுக்கு தெரியாது ஆனால் அவர்களுக்கு தெரியும், அதனால்தான் நான் பகிரங்கமாக பலமுறை பெயரை குறிப்பிட்டு குற்றம்சாட்டியபோதும் எந்த எதிர்ப்பும் காட்ட இயலாமல் தலைகவிழ்ந்து நிற்கின்றனர். என்னிடம் உள்ள ஆதாரங்களின் வலிமை அப்படிப்பட்டது.

யுவராஜ்தற்போது கடந்த 24-08-2026-ம் தேதி அனைத்து நிர்வாகங்களுக்கும் [நீதிதுறை, நிர்வாகதுறை, காவல்துறை] மிகத்தெளிவான எச்சரிக்கையை கொடுத்துள்ளார் அம்மா, 15 நாட்களுக்குள் வழக்கு என்ன தேதியில் இருந்து விசாரணை துவங்கும் என்ற செய்தி நமக்கு தெளிவுபடுத்தப்படாவிட்டால் அதன் பிறகு நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தையும், உள்ளிருப்பு போராட்டத்தையும் அம்மா துவங்குவார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எப்போதும் அகிம்சையான போராட்டங்களை மட்டுமே நம்புகிறோம், ஆனால் அதைவிட கூறிய ஆயுதம் வெற்றிக்கு வேறு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நமது போராட்ட களம் அமையும்.

அம்மாவிற்கு மகன் தேவை என்பதால் முதல் ஆளாக களம் காண்கிறார், இவருடன் இணைந்து களம் காண விரும்பும் எவர் ஒருவரும் போராட்டகளம் செல்லலாம். அடக்குமுறைக்கும் மிரட்டலுக்கும் அஞ்சாதவர்கள் மட்டும் அங்கு சென்றால் போதுமானது, வேடிக்கை பார்ப்போருக்கு சிரமம் இல்லாமல் சம்பவங்கள் நேரலை செய்யப்படும், எனவே *”கூட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டனர் என்பதில் வெற்றி கிடைக்காது, எவ்வளவு வீரியமான போராளிகள் கலந்து கொண்டனர் என்பதில்தான் வெற்றி கிடைக்கும்”* என்பதை நான் உறுதியாக நம்புபவன், எனவே என்ன நடந்தாலும் சந்திக்க தயார் என்று களம் செல்பவர்கள் மட்டுமே நினைத்ததை சாதிக்க இயலும்.

யுவராஜ்
யுவராஜ்

இனி நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் நானே நேரடியாக வழிநடத்துவேன், நடக்கும் அனைத்துக்கும் நானே முதல் நபராக பொறுப்பேற்பேன், நமக்குள்ள பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வர நாம் சட்டவிதிமுறைகள்படி பிரச்சனைகளை ஆரம்பிப்போம்.

அறிவிப்பு வெளியானதும் களத்தில் நிற்க கிளம்பும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து அணி திரட்ட உரிய நிர்வாகிகளும், தகவல் கிடைத்ததும் களத்திற்கு செல்ல பேரவை செயல்பாட்டாளர்களும் தயாராக இருக்க கேட்டுக்கொள்கிறேன்.

“நமது உறுதியான நடவடிக்கைகளால் எதிரிகளின் சதிகளை தகர்த்தெறிவோம்” நன்றி.

–    உங்கள் யுவராஜ்” என்பதாக முடிகிறது, அந்த கடிதம்.

—  அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.