இனி வீதியில் குப்பையை வீசினால் … அபராதம் – ஆணையர் விடுத்த எச்சரிக்கை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில், மாநகராட்சி ஆணையாளர் திருமதி பொன்மணி இ.ஆ.ப., தலைமையில்  பொது சுகாதாரப்பிரிவு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேற்படி கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநகர் நல அலுவலர், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகளை 100% பின்பற்றிட அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், குப்பைகளைப் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் புதிதாக வந்துள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி நான்கு வர்ணம் கொண்ட குப்பைத் தொட்டிகள் மூலம் பிரித்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன்படி, பச்சை நிறக் குப்பைத் தொட்டியில் மக்கும் குப்பையும், நீல நிறக் குப்பைத் தொட்டியில் உலர்ந்த மற்றும் மறுசுழற்சிக்குரிய குப்பையும், சிவப்பு நிறக் குப்பைத் தொட்டியில் அபாயகரமான கழிவுகளும், கருப்பு நிறத் தொட்டியில் டயப்பர் மற்றும் நாப்கின் போன்ற கழிவுப்பொருட்களுமாக பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும், திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று வார்டு 23 பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தில் திடக்கழிவுப் பொருட்களைக் கொட்டி வைத்திருந்த திருமண மண்டபத்திற்கு மாநகர நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் ரூபாய் 5,000 அபராதம் விதித்தார். உடன் சுகாதார அலுவலர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர்கள் இரா. ஆல்பர்ட் மற்றும் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் திருமதி பொன்மணி இ.ஆ.ப.,  தெரிவிக்கையில், திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆய்வின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இவற்றையெல்லாம் தவிர்க்க திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் அரசின் விதிகளுக்கு பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.