நூதன முறையில் மோசடி செய்கிறார்கள் … தனியார் வங்கிக்கு எதிராக வரிந்து கட்டிய விவசாயி !
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரந்தர வைப்பு நிதி, வட்டி பணத்தில் கடந்த மூன்று மாதங்களாக 20 சதவீதம் பணம் பிடித்தம் செய்து, மூத்த குடிமக்களுக்கு வரி கட்டத் தேவையில்லை என கூறிவிட்டு, வரி பிடித்தம் செய்து நூதன முறையில் மோசடி செய்துள்ளதாக விவசாயி குற்றச்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் நகராட்சி பகுதியை சேர்ந்தவர் முகமது கவான் (70). இவர் சீலையம்பட்டியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில், கடந்த 6.6.2025 ஆம் ஆண்டு நிரந்தர வைப்பு நிதியாக சுமார் 10 இலட்சம் ரூபாய் செலுத்தினார். அதற்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 7.8% வட்டி வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனை நம்பி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் முகமது கவான் 10 இலட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தினார். 6000 ரூபாய் வட்டி பணம் வழங்கப்படும் என வங்கி மேலாளர் தெரிவித்தார்.

ஆனால், வட்டி பணத்தில் 20 சதவீதம் வரி பிடித்தம் செய்து மீதம் 4000 ரூபாய் மட்டுமே விவசாயி முகமது கவானுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்பட்டது. இது குறித்து விவசாயி வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்டபோது, அதற்கு வங்கி மேலாளர் நீங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு இணைக்கவில்லை அதனால் தான் வங்கியில் தலைமை அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வங்கியில் பணம் செலுத்தும் போது ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். கடந்த மூன்று மாதங்களாக வட்டி பணத்தில் வரி பிடித்தம் செய்ததால், ஆத்திரமடைந்த விவசாயி வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப எடுக்க வேண்டுமென பதிவு தபால் அனுப்பினார்.
அதற்கு வங்கியில் இருந்து நீங்கள் பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு எடுத்தால், அதற்கு நான்கு சதவீதம் அதாவது எட்டாயிரம் ரூபாய் எடுத்துக் கொள்வோம் என தெரிவித்தனர்.
இதனால் விவசாயி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நூதன முறையில் மோசடி நடைபெற்று வருவதாக விவசாயி முகமது கவான் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மேலும், மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வட்டி பணத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்து சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் நூதன முறையில் மோசடி நடைபெற்று வருவதாக விவசாயி முகமது கவான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகமும் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
— ஜெய்ஸ்ரீராம்
Comments are closed, but trackbacks and pingbacks are open.