அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அதிமுக பிளவுக்கு காரணமே அந்த நரிதான் ! கொளுத்தி போட்ட முன்னாள் எம்.பி. ! அதிமுகவில் அடுத்த பூகம்பம் !

அதிமுகவில் அடுத்த பூகம்பம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

நேற்று O பன்னீர்செல்வம். இன்று செங்கோட்டையனை வெளியேற்றிய அந்த நரி  நாளை C.V சண்முகம், S.P.வேலுமணி போன்றோரையும் வெளியேற்றும். அந்த நரியால்தான் நானும் வெளியேற்றப்பட்டேன் என தொடங்கி … எடப்பாடி அமித்ஷாவை மோதவிட்டு, எடப்பாடி பழனிசாமியை முடித்துக்கட்ட முனைப்போடு  இருக்கும் அந்த நரி, விஜய் எனும் மாய மானை முன்னிறுத்தி அதிமுக மூலமாக விஜய்யை முதல்வராக்க முடிவு செய்துள்ளது அந்த நரி. என்பதாக முடியும் அந்த பதிவு அதிமுகவில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக இருக்கிறது.

அதிமுக முன்னாள் எம்பி கேசிபி என்று அழைக்கப்படும் கேசி பழனிச்சாமி தனது முகநூல் பக்கத்தில் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கும் அந்த முக்கிய புள்ளியை மையப்படுத்தி “நரியோடு ” ஒப்பிட்டு இப்படி ஒரு பதிவை  எழுதி பற்ற வைத்துள்ளார். அந்த பதிவு தற்போது தீயாக  எரிந்து கொண்டிருக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

 கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

அந்தப் பதிவில்,

https://www.livyashree.com/

அதிமுகவை சீர்குலைத்துக் கொண்டு வரும் தந்திரமான நரி ! எப்போது அம்பலமாகும் ? அதிமுகவில் ஒரு சாதி வெறி பிடித்த நரி அம்மா காலத்தில் “சாதி வெறியன்” என்று முத்திரை குத்தப்பட்டு அமைச்சரவை மற்றும் கட்சிப் பொறுப்புகளில்  இருந்து நீக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டது.

அந்த நரி அம்மா இருக்கிற வரை அட்ரஸ் இல்லாமல் இருந்தது. அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு OPS ஐ முதலமைச்சராக்குகிறேன். கட்சித் தலைவர் ஆக்குகிறேன் என்றெல்லாம் சொல்லி சதி திட்டம் தீட்டி OPS-ஐ முன்னிறுத்தி முதல் பிளவை உருவாக்கியது. அதில் தன்னை இரண்டாம் இடத்திற்கு உயர்த்திக் கொண்டது.

அதன்பின் அந்த நரி முக்குலத்து சமுதாயத்தை பழிவாங்க முனைப்போடு செயல்பட்டது. இந்த இயக்கம் ஒன்றிணைய வேண்டும் என்று எல்லா தொண்டர்களும் விரும்பிய பொழுதும் நான் அதற்கு முயற்சி எடுத்த பொழுதும் அந்த நரி அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஒரு நாள் அந்த நரியை தோலுரித்த பின்னர் சில காலம் முடங்கியது.

ஒ பன்னீர் செல்வம்
ஒ பன்னீர் செல்வம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பின்னர் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைகிற பொழுது முட்டுச்சந்தில் இருந்து  தனது சித்து விளையாட்டுக்கள் மூலம் பல சீனியர்களை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முன்னேறியது.

இந்த இயக்கம் வலுவோடு விளங்க வேண்டும் என்று நினைத்த பலரையும் தன் சதி திட்டத்தால் பின்னுக்கு தள்ளியது. என் போன்றவரை கட்சியிலிருந்து நீக்க வைத்தது. தற்பொழுதும் எடப்பாடி பழனிசாமியை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போலவும், ஜெயலலிதா அம்மா போலவும் ஆக்கி விடுவேன் என்று ஈபிஎஸ் ஐ  உசுப்பேற்றி செங்கோட்டையன் போன்றவர்களை வீழ்த்தி இந்த இயக்கத்தின் ஒற்றுமையை தடுத்து வலிமையை சிதைத்து கொண்டு இருக்கிறது.

C.V சண்முகம், S.P.வேலுமணி போன்றோரையும் காவு வாங்க காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ற சதிவலைகளையும் தீட்டிக் கொண்டிருக்கிறது.  அதிகார போதை ஊட்டி ஊட்டி எடப்பாடியை தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு இந்த இயக்கத்தை என்றுமே வெற்றி பெற முடியாத நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி இனம் கண்டு இந்த நரியை தோலுரிக்காவிட்டால், 2026 மட்டும் அல்ல எந்த காலத்திலும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை ஏற்படும். இவர் காலத்தில் இந்த இயக்கம் வலுவிழந்தது என்ற தீராத பழிச்சொல்லுக்கு எடப்பாடி ஆளாக நேரிடும்.

AIADMK Protest: Case filed against edappadi palanisamy for violiting rules  and protesting against DMK | Edappadi Palanisamy:மேலும், எடப்பாடியையும் அமித்ஷாவையும் மோதவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் முடித்துக்கட்ட முனைப்போடு  இருக்கிறது அந்த நரி, விஜய் எனும் மாய மானை முன்னிறுத்தி அதிமுக மூலமாக விஜய்யை முதல்வராக்க முடிவு செய்துள்ளது அந்த நரி.

அந்த நரியின் உண்மை பெயரை தெரிந்தவர்கள் Comment ல் பதிவிடவும்… #ADMK #KCPalanisamy #EdappadiPalanisamy” இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

அவர் முகநூலில் உள்ள comment பாக்ஸை திறந்து பார்த்தபோது கர்நாடக,  ஆந்திரா மாநிலங்களை ஒட்டியுள்ள மாம்பழத்துக்கு பெயர்போன மாவட்டத்துக்காரரின் பெயரைத்தான் அவரது ஆதரவாளர்கள் நிரப்பி வைத்திருக்கிறார்கள். KCP பற்றவைத்த அந்த பெயர் சுருக்கமாக KPM எனவும்  குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே அதிமுகவில்  வெடித்து வெம்பிக் கொண்டிருக்கும் எரிமலையில் கேசி பழனிச்சாமி தன் பங்கிற்கு கொளுத்தி போட்டிருப்பது  பூகம்பமாக வெடித்து சிதறுமா ? அல்லது புஸ்வாணம் ஆகுமா ? என்ற விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

 

  —    மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.