அரசு செட்டாப் பாக்ஸ்களை இயக்க மறுக்கும் தனியார் கேபிள் டிவி நிறுவனத்தினர் !
அரசு செட்டாப் பாக்ஸ் களை இயக்க தனியார் கேபிள் டிவி நிறுவனத்தினர் மறுப்பு! தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங்கிடம் புகார்.
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்கிடம் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை இயக்க முடியாது என தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் புகார் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதியவர்களுக்கு கேபிள் டிவி நிறுவனம் நடத்த உரிமம் வழங்கக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு அரசு பாக்ஸ் இல்லாததால் தனியார் பாக்ஸ்களை வழங்கி வந்த நிலையில் அதை எடுத்துவிட்டு அரசு பாக்ஸ்களை போட வேண்டும் என அரசு நிர்பந்துப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஒரு கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். சுமார் 25,000 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொழில் நடத்தி வருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்யாமல் இருந்தது.
அரசு கேபிள் டிவி நிறுவனம் 2 லட்சம் பாக்ஸ் விலை கொள்முதல் செய்து உள்ளது. செட்டாப் பாக்ஸ் ஆப்பரேட்டர்கள் அரசு நிறுவனத்திடம் ரூபாய் 500 கொடுத்து வாங்கி வாடிக்கையாளர்களுக்கு பொருத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக அரசு பாக்ஸ்களை வாங்கி, தனியார் பாக்ஸ்களை எடுத்து விட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என நிர்பந்தம் செய்கின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அரசு அதிகாரிகள் சொல்வதை கேட்கும் மறுக்கும் பகுதியில் புதிய ஆபரேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தனியாரிடம் காசு கொடுத்து வாங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் மீண்டும் அரசிடம் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைமையில் வாடிக்கையாளர்கள் உள்ளதால் அரசு செட்டாப் பாக்ஸ்களை தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இயக்க மறுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் இடம் புகார் தெரிவித்தனர்.
— ஜெய்ஸ்ரீராம்.