அண்ணாமலை கைது ! மறியல் போராட்டம் செய்த பாஜகவினர் !
அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்…
டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை மாநகரில் பாஜகவினர் மாவட்ட தலைவர் தலைமையில் தல்லாகுளம் தபால்நிலையம் முன்பு ஒன்றுகூடி மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகில் சாலை மறியல் ஈடுபட்டு போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டு தமிழன்னை சிலை அருகில் பிரதான சாலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.