paytm என்னும் சிக்கல் !
சில மாதங்களுக்கு முன்பு வரை கடையில் சவுண்ட் பாக்ஸ் இல்லாமல் தான் ஸ்கேனர் மூலம் paytm பரிவர்த்தனை செய்துகொண்டிருந்தேன். அப்போது சவுண்ட் பாக்ஸ் வாங்கச் சொல்லி படையெடுத்தார்கள். இரண்டு முறை போன் செய்வார்கள். தினமும் சேல்ஸ்மேன் டப்பாவைத் தூக்கிக்கொண்டு வந்து கெஞ்சுவான். பாக்ஸ் வாங்கிய சில கடைக்காரர்களின் புலம்பலை கேட்டதினால் அவர்களை விரட்டியபடியே இருந்தேன்.
கடைசியாக தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவன் வந்து ‘சார் உங்களுக்கு சவுண்ட் பாக்ஸ் ஃப்ரீயா அலாட் ஆயிருக்கு. மாசம் 300 ட்ரான்ஸாக்ஷன் பண்ணினால் சார்ஜ் இல்லை. அதுக்கு குறைவாக இருந்தால் 75 ரூபாய் வரும்’ என்று கெஞ்சினான். லைஃப் டைம் எந்த சார்ஜும் வராது என்று தலையில் அடித்து சத்தியம் செய்தான். சரி முயற்சி செய்வோம் என்று வாங்கினேன். மூன்று மாதங்கள் வரை தொந்தரவில்லை. இந்த மாதம் ஒன்றாம் தேதி இப்படி ஒரு மெசேஜ் வந்தது…

Dear Merchant, Your Paytm Soundbox rental is updated. Now pay Rs.0 rental on accepting 1000 transactions, else Rs.125 rental applies.
இந்த மெசேஜ் வந்ததற்குப் பிறகு, பத்து நாட்களுக்கு ஒரு முறை வந்து ஸ்கேனரை அப்டேட் செய்யும் ஆசாமிகளும் வரவில்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை. கஸ்டமர் கேருக்கு அழைத்தாலும் ஒன்றை அமுக்கு இரண்டை அமுக்கு என்று விளையாடிவிட்டு கடைசியில் கட்டாகிவிடுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்று காலை டப்பா கொடுத்த ஆசாமி மறுபடி கால் செய்தான். ‘உங்க நம்பருக்கு லோன் அலர்ட் ஆயிருக்கு, வாங்கிட்டீங்கன்னா தவனையை டெய்லியும் நாங்களே பிடிச்சுக்குவோம்’ என்று வழிந்தான். சவுண்ட் பாக்ஸ் பற்றி கேட்டதற்கு ‘கஸ்டமர் கேருக்கு ஒரு கால் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணுங்க’ என்றான் கூலாக! நாளைக்கு நேரில் வரச்சொல்லியிருக்கிறேன். சவுண்ட் பாக்ஸ் பிரச்சனையை நீயே சால்வ் செய்துவிட்டுக் கிளம்பு என்று பைக் சாவியை பிடுங்கிவைக்கப்போகிறேன்!
— பார்த்தசாரதி (திருப்பூர் சாரதி).