தயாரிப்பாளர் அஸ்வினி தத் அறிமுகப்படுத்திய ’’ கல்கி 2898 AD ” பட முன்னோட்டம் !

சுவாரசியமான கற்பனை கதை - சர்வதேச தரத்திலான படமாக்கம் - மாஸான காட்சிகள் - கண்களை இமைக்க மறக்கடிக்கச் செய்யும் அற்புதமான வி எஃப் எக்ஸ் காட்சிகள்- நட்சத்திர கலைஞர்களின் நேர்த்தியான மற்றும் வித்தியாசமான திரைத்தோன்றல் - மயக்கும் பின்னணி இசை...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பாளர் அஸ்வினி தத் அறிமுகப்படுத்திய ‘கல்கி 2898 AD ‘ பட முன்னோட்டம்

ந்தியாவின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் மே.10-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் கலந்துகொண்டு வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் ‘கல்கி 2898 ஏ டி ‘ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ” இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஜூன் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது பிரமிப்பில் ஆழ்த்தப் போகும் கல்கி 2898 ஏடி

சுவாரசியமான கற்பனை கதை – சர்வதேச தரத்திலான படமாக்கம் – மாஸான காட்சிகள் – கண்களை இமைக்க மறக்கடிக்கச் செய்யும் அற்புதமான வி எஃப் எக்ஸ் காட்சிகள்- நட்சத்திர கலைஞர்களின் நேர்த்தியான மற்றும் வித்தியாசமான திரைத்தோன்றல் – மயக்கும் பின்னணி இசை… என ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.