பனங்கிழங்கு உற்பத்தி அதிகரிப்பு ! விற்பனை வீழ்ச்சி !

பணக்காரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு என்று சொல்வார்கள்.. 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பனங்கிழங்கு உற்பத்தி அதிகரிப்பு; விற்பனை வீழ்ச்சி !

“கற்பக விருட்சம்’ என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் ஓலை முதல் வேர் வரை , மனித குலத்துக்கு  இயற்கை கொடுத்த அரிய கொடை எந்தவித இயற்கை பேரிடரையும் எதிர்கொண்டு,  பயன் தரும் என விவசாயிகள் பெருமிதம் , கொள்கிறார்கள்

அங்குசம் இதழ்..

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பனைமரங்கள் அதிகம் உள்ளன.  தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  பனங்கிழங்கு சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான
செல்லகுட்டப் பட்டி, மத்தூர், திப்பனூர், களர்பதி, சாமல்பட்டி , அம்மன்கோவில்பதி ,  கவுண்டனூர், தாதம்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் பனை மரங்களில் சேகரிக்கப்படும் பனம்பழ விதைகளை கொண்டு, விவசாயிகள் பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். பச்சை கிழங்குகளை சேலம், பெங்களூரூ, சென்னை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்பனை மரத்தில் உள்ள நுங்கு பனை பழமாக மாறுகிறது அதன் பின்பு வெட்டி எடுத்து பனை பழத்தில் மூன்று மூன்றாக விதைகள் இருக்கும் தனித்தனியாக பிரித்து வெயிலில் காய வைத்து  சேமித்து வைக்கும் விதைகளை உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவோம் விதைகள் முளைக்கும்போது, நிலத்தில் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக்
கிழங்கு  உருவாகிறது கிழங்கு உருவானதும் அதனைக் விற்பனைக்கு அனுப்புகிறோம் இந்த ஆண்டு கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், போச்சம்பள்ளி பகுதியில் பனங்கிழங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறார் பனை  விவசாயி நாகராஜன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இது ஒரு சீசன் கிழங்கு.. மார்கழி மாசம் முதல் மாசி வரை பனங்கிழங்கு சீசன் இருக்கும்.. இந்த காலக்கட்டங்களில் அதிகமாகவே பனங்கிழங்கு கிடைக்கும்.. விலையும் மலிவுதான்  அவ்வபோது 100 கிழங்கு  ருபாய்  300 க்கு வாங்கி வந்து அதை அவித்து
ஒரு கட்டில் (பெரியது ) 5 , அல்லது சிறியதாக இருந்தால் 6 கிழங்குகள் கொண்ட கட்டு கட்டி   , ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்
கட்டுக்கு  5 ,ருபாய் வரை  கிடைக்கும் அதிக விலைக்கு விற்றால் மக்கள் வாங்குவதில்லை சில நாட்களில் கிழங்கு விற்காமல் போனால் தூக்கி எரிந்து விடுவேன் மறுநாள் விற்க முடியாது காய்ந்து விடும் அன்றைய வருமானம் அவ்வளவுதான் என்றார் சாம்பல்பட்டியை சார்ந்த பனங்கிழங்கு வியாபாரி  பெரியவர் சிவாஜி பணக்காரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு என்று சொல்வார்கள்..  பனங்கிழங்கில்  வைட்டமின் பி மற்றும் சி வைட்டமின்கள்  உள்ளது.. 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகள் உள்ளது .. 1 கிராம் புரதம், 21 கிராம் கார்போஹைட்ரேட், 77 கிராம் நீர்ச்சத்து உள்ளது  பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளன  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.. உடல் எடை மெலிந்தவர்கள், எடை கூட வேண்டுமானால், இந்த பனங்கிழமை சாப்பிடலாம். .இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த சோகையை நீக்கி ரத்த விருத்தியை அதிகரிக்கிறது
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த சோகை தீரும். அதிக நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த மருந்து  குளிர்ச்சி தன்மை உடையது.

சில உபாதைகள்
இந்த கிழங்கை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் சில உபாதைகள் ஏற்படும், ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை ஏற்படுத்தும் சிலருக்கு வாயுத்தொல்லை வரலாம். அப்படியிருந்தால், பூண்டு சேர்த்து கொள்ளலாம். ஆரோக்கியமான உடலைப் பெற, பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் பித்தம் அதிகரிக்கும். அதுவும் எண்ணெய்யில் வறுக்காமல், பொரிக்காமல், மிதமான அளவில் குழம்பு, கூட்டு, பொரியலாக சாப்பிடலாம். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே?? என்கிறார் ஆண்டியப்பனூர் அரசு சித்தா மருத்துவர் விக்ரம் குமார் அவர்கள்பனங்கிழங்கு உணவுகள்

குறிப்பாக, பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து இடித்து மாவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது துண்டுகளாக நறுக்கி வெயிலில் 3 நாட்களுக்கு காய வைத்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த மாவு மட்டுமே பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தருகிறது. பனங்கிழங்கா மாவில் புட்டு செய்வார்கள்.. அவியல் செய்வார்கள்.. வடை செய்வார்கள்.. பாயாசம் செய்வார்கள்.. தோசை செய்வார்கள்.. உப்புமா செய்வார்கள்.. இந்த மாவுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு தேவையான பலன் கிடைக்கும்.. இந்த பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும்.  பனங்கிழங்கு மாவை உட்கொள்ளும் போது , பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும், இந்த மாவில், கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிடலாம்
தோசை, பாயாசம்: சுவைக்கேற்றபடி இன்னும் எத்தனையோ வகைகள்  செய்து சாப்பிடலாம். என்கிறார் அம்மன்கோவில்பதியை சார்ந்த இல்லத்தரசி நந்தினி புருஷோத்தமன்.

மணிகண்டன்.கா.

 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.