அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நீ என்ன சிஎம்மா இல்ல அமைச்சரா ? கைகளை வெட்டிய ரவுடிக்கும்பல் !

திருச்சியில் அடகு நகையை விற்க

பஞ்சமி நில மீட்புக்காகப் போராடிய சமூக ஆர்வலர் முத்துராசாவின் (28) இரண்டு கைகளையும் வெட்டிய ரவுடிக்கும்பல் !

சனநாயக சக்திகளான நாமெல்லாம் இணைந்து என்ன செய்யப் போகின்றோம் என்பதுதான் இங்கே இப்போது உடனடியாக பேசப்பட வேண்டிய முதன்மை செய்தி!

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்கு ஏற்படும் நிலையைக்கண்டு தமிழ்நாட்டின் அத்தனை அமைப்பகளும், கட்சிகளும் இந்நேரம் இந்த ஐந்தாறு நாட்களாக வீதிகளில் மட்டுமே திரண்டு நின்றிருக்க வேண்டும். ஏன் எனில் அப்படியொரு கொடூரமான தாக்குதல்தான் முத்துராவின் மீதான இந்தத் தாக்குதல்.

இது முத்துராசா மீதான தாக்குதல் மட்டுமா இல்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மீதும் தொடுக்கப்பட்டிருக்கிற தாக்குதலாகும்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பஞ்சமி நில மீட்புப் போராட்ட வரலாற்றில் முத்துராசாவைப் போன்ற ஒரு துணிவான நபர் இன்று நம் கண் முன்னால் இருப்பதே

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கொரு பெருமையாகும். அந்தளவிற்கு அந்தத் தம்பியின் துணிவான செயல் இருந்துள்ளது.

இன்றைக்கு முத்துராசா இரு கைகள் பயன்பாட்டில் இல்லாமல் படுத்திருப்பதும், அவர் இருந்த காங்கிரஸ் கட்சியிலிருந்தும், தமிழ்நாட்டின் ஆளும் கட்சி அல்லது கூட்டணி கட்சிகள், சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் என எவருமே இன்று வரை எட்டிக்கூடப் பார்க்காமல் தள்ளி நிற்பதும் வேதனையை அளிக்கிறது.

சமூக ஆர்வலர் முத்துராசா
சமூக ஆர்வலர் முத்துராசா

இத்தகையக் கொடூரத் தாக்குதலுக்குப் பின்பும்கூட தமிழ்நாடு அரசு, அதன் கீழ்ச் செயல்பட்டு வரும் ஸ்காட்லாந்து யார்ட்டுக்கு நிகராக சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் மதுரை மாவட்டக் காவல்துறை மூலமாக சாதிவெறிபிடித்த ஆளும் கட்சியின் நிலக் கொள்ளையர்களால் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் சிகிச்சையில் இருக்கும் முத்துராவிற்கு பாதுகாப்பு வழங்காமல் பல்லிளித்து வேடிக்கை பார்ப்பதையும் நினைத்து நான் மட்டுமல்ல சனநாயகத்தை நேசிப்பவர்கள் அத்தனை பேரும் கொதித்தெழுந்துதான் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த நொடி வரையில் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்காண சனநாயக அமைப்புகள் இப்படியொரு கொடூரத் தாக்குதலை எதிர்த்து இன்னும் வீதிக்கு வந்து சாதிவெறியர்களுக்கும், நிலக் கொள்ளையர்களுக்கும் எதிராக வாய் திறந்து பேசிப் போராடமல் இருப்பது எல்லாவற்றையும்விட மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அமைப்பின் தோழர்களே ! வணக்கம் !

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சார்ந்த தம்பி முத்துராசா ஒரு ஜேசிபி வாகனத்தை இயக்கி அதை வைத்து தனது குடும்பத்தை நகர்த்தி வந்தவராவார்.

திருமணமான முத்துராசா தனது மனைவி {விஜி} விஜயலட்சுமி, மகன் ஆதிரன் (3), மகள் இனியவள் (1), மற்றும் தனது குடும்பத்தின் உறவினர்கள் உறவுசார் பெருமக்களுடன் வாழ்ந்து வருகின்ற ஒரு சராசரியான மனிதர். 12 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ள தம்பி முத்துராசா தனது பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு உரிய குடிநீர், சாலை வசதி போன்றவற்றுக்காக முதன் முதலில் மதுரை சென்று மனுக்கொடுத்து அரசு நிர்வாகம் அதற்குச் செவிசாய்க்காத போது அதை போராடியாவது பெற வேண்டும் என மீண்டும் மனுக் கொடுத்து அழுத்தம் கொடுத்து அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக மக்கள் ஏதேனும் சிறு, சிறு பிரச்னைகளுக்காக முத்துராசாவைத் தேடி வரும்போது இவர் தனக்குக் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில் அரசு அலுவலகங்களுக்கச் சென்று அரசு நிர்வாகத்திடம் பேசி அதைச் செய்து வந்த நேரத்தில் மேலூர் காங்கிரஸ் கட்சியினர் இந்தத் தம்பியை அணுகி, நம்ம கட்சிக்கு வாங்க என்று அழைத்து காங்கிரஸ் கட்சியின் மேலூர் நகர நிர்வாகியாக்கி உள்ளனர்.

தனது தந்தையும் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் சரி என்று ஏற்றுக் கொண்டு இணைந்த முத்துராசா வழக்கம் போல தனது மக்கள் பணியைத் தொடர்ந்த நேரத்தில், கொடுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு வீட்டுமனை இல்லை. தாங்கள் ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று வர அதைக் கேட்டுக்கொண்ட தம்பி முத்துராசா அரசுக்கு மனுவாகக் கொடுத்தபோது அரசு தரப்பில், மேலூர் வட்டத்தில் தாங்கள் கேட்கின்ற பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்குக் கொடுப்பதற்கான அரசுப் புறம்பேக்கு நிலம் இல்லை.

எனவே தாங்கள் கேட்ட பகுதியில் நிலம் வழங்கிட வாய்ப்பில்லை என்று பதிலளித்துள்ளனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

முத்துராசா இதை அப்படியே விடாமல் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்ட போது, நூற்றுக்கணக்கான ஏக்கர் DC பஞ்சமி நிலமும், ஆதிதிராவிடர் கண்டிசன் நிலமும் இருப்பது தெரியவர இதை வைத்து மீண்டும் மேலூர் வட்டாட்சியரை அணுகிக் கேட்ட போது…

என்னப்பா எப்பப் பார்த்தாலும் வந்து பிரச்னை செய்யுற ?

நீ என்ன சிஎம்மா இல்ல அமைச்சரா ?

நீ கேட்டதையெல்லாம் நாங்க செய்ய ?

போப்பா போய் வேலையப் பாருப்பா

என்று சொல்லி வட்டாட்சியர் அனுப்பிட, இதனைக் கண்ட முத்துராசா தானே மனுதாராகி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி வழக்குப் போட்டுள்ளார்.

தாம் போராடிப் பெற்ற நீதிமன்ற உத்தரவுப் பின்புதான் மேலூர் பகுதியைச் சேர்ந்த சாதிவெறிக் கும்பல் முத்துராசாவை வெறிக்கொண்டு வெட்டியுள்ளனர்.

வெட்டியவர்களுக்கும், வெட்டப்பட்டு இரு கைகளும் இன்று இயங்காமல் இருக்கின்ற முத்துராசாலிற்கும் ஏதேனும் முன் பகை இருக்கிறதா? என்றால் அப்படி எதுவுமில்லை. சரி வெட்டியவர்கள் யாரும் நிலத்தை ஆககிரமித்து வைத்து இருப்பவர்களா என்றால் அதுவுமில்லை.

பிறகு ஏன் வெட்டினார்கள் ?

அந்தப் பகுதியின் மண்ணின் பூர்வகுடி மக்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சமி நிலத்தைக் கேட்டு உயர்நீதிமன்றம் சென்று நீதித் தீர்ப்பைப் பெற்றதற்கு பிற சாதியினர் ஏன் கோவப்பட்டு முத்தராசாவின் இரண்டு கைகளை மட்டும் குறிபார்த்து வெட்டியிருக்க வேண்டும் ?

இந்தக் கைகள்தானே மனு எழுதிக் கொடுத்தது? இந்தக் கைகள்தானே அந்தப் பகுதியின் மக்களுக்காக நீண்டன இது முதலில் யாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

மேலூர் வட்டாட்சியருக்கு, பிறகு யாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது? அந்தப் பகுதியின் அரசியல் ஆளும் கட்சியின் செல்வாக்குள்ள நபர்களுக்கு இவர்களின் தூண்டுதலில்தான் முத்துராசாவை மிகக் கொடூரமான முறையில் சாதிவெறிக் கும்பல் வெட்டியுள்ளது. வெட்டியது சாதிவெறிக் கும்பர்தான் என்றாலும்

வெட்டத் தூண்டியலர்கள் நிலக் கொள்ளையர்கள் என்பதை நாம் கவனமாக குறித்துக்கொள்ளவும்.

ஒரு கை வெட்டுப்பட்டுத் தனியாகக் கீழே விழுந்த போதும்கூட எதிரிகளிடம் சரணாகதியடையாமல் தன்னுடைய மற்றொரு கையால் அங்கு ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி வெட்டியவர்களை திரும்ப ஓடவைத்து வெட்டப்பட தனது ஒரு கையை மற்றொரு கையால் எடுத்துக்கொண்டு வந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இந்த வகையான அசாத்திய துணிச்சல்காரனை யாரும் அடையாளம் கண்டு காக்காமல் விட்டுவிட்டோமே என நெஞ்சமெல்லாம் கலங்ககிறது. அப்பப்பா எப்பேர்பட்ட ஒரு துணிச்சல்காரன் ஆயிரம் புத்தகங்களைப் படித்துவிட்டு உலக வீர வரலாற்றைப் பேசி வருகின்ற தமிழ்நாட்டின் போராட்ட அமைப்புகள் ஒவ்வொன்றும் தம்பி முத்துராசாவின் வீரச் செயலைப் பாராட்டாமல் கடந்து போய்விட முடியாது.

பேரன்பிற்கினிய தோழர்களுக்கும் சனநாயக சக்திகளுக்கும்  உரிமையுடன் ஒரு முன்வைக்கிறோம். தம்பி முத்துராவிற்கான பாதுகாப்பு மற்றும் அவரின் மறுவாழ்விற்காக தமிழ்நாடு அரசிடம் அழுத்தம் கொடுங்கள் என சமூக செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.