இருளில் தீபாவளியை கொண்டாடிய அவலம் ! மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம் ! டார்ச் லைட் அடித்து போராட்டம் !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரம்பட்டி கிராமத்தில்  பிள்ளையார் கோவில் தெரு, நடுத்தெரு, வட்டத் தெரு ஆகிய பகுதிகளில் சுமார்  200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

இருள் தீபாவளி

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அப்பகுதியில் உள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதால், மின் விநியோகம் தடைபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு புகார் தெரிவித்தும் , எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், கடந்த ஐந்து நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இருளில் தான் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை அந்த பகுதி மக்கள் கொண்டாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டிய மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிரான்ஸ்பார்மில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இது சரி செய்யப்பட்டு வருகிறது விரைவில் மின்சாரம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

— மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.