இனிமேல் பி.எஃப் ..
இனிமேல் புதிய வருமான வரி முறைதான் என்றாகிவிட்ட பின்னர், தனியார் நிறுவனங்களில், பி.எஃப் என்பதை முழுமையாகவே நிறுவனங்கள் தான் கொடுக்க வேண்டும் என்றாக்கிவிடலாம். வெறும் எழுத்தில் தான் பி.எஃப் என்பது ஊழியர் கட்டுவது நிறுவனம் கட்டுவது என்றெல்லாம் இருக்கிறது. உண்மையில் CTC என்று சொல்லிவிட்டு அனைத்துமே மொத்த ஊதியத்திலிருந்துதான் பிடிக்கப்படுகிறது.
![வெறும் எழுத்தில் தான் பி.எஃப்](https://angusam.com/wp-content/uploads/2025/02/06.02.2025-angusam.com_.jpg)
எடுத்துக்காட்டுக்கு அடிப்படை ஊதியம் 50,000 என்றால், 12% – 6,000 நிறுவனம் போடும் பி.எ.ஃப் எனவும், 6,000 ஊழியர் போடுவது எனவும் வரவேண்டும். ஆனால் மொத்த ஊதியம் பேசும்போதே மாதம் 62,000 என்று பேசுவார்கள். அதில், மாத ஊதியம் போடும்போது, நிறுவன பி.எஃப் பங்கு காண்பிக்கப்பட மாட்டாது. 56,000 மொத்த ஊதியம் என்று காண்பித்துவிட்டு, பிடித்தம் என 6,000 எடுப்பார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முன்னர் பழைய வருமான வரி முறையில் கட்டியபோது, 56,000 என்பதிலிருந்து 6,000 கழித்துவிட்டு 50,000க்கு வரி கட்டினால் போதும். இப்போது புதிய முறையில் அப்படி எந்தக் கழிவும் இல்லை. அதனால் 56,000க்கு வரி கட்ட வேண்டும். இது ஒரு தேவையில்லாத வேலை. இதற்குப் பதில் 24% நிறுவனமே தருகிறது என்றாக்கி விட்டால் அது ஊதியமாகவே காண்பிக்கப்படாது. 50,000 என்று கைக்கு வரும் காசுக்கு மட்டும் வட்டியைக் கட்டி விட்டு நடையைக் கட்டலாம்.
— பாலாஜி மூா்த்தி.