தவறாக செயல்படும் கால்சென்டர் மற்றும் வெப்சைட்டுகள் ! புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கால் சென்டர் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் வெப்சைட் & App  சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் எச்சரிக்கை பதிவு:

⭕BPO மற்றும் கால் சென்டர் நடத்துபவர்கள் மத்திய/மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி பெறுவது கட்டாயம், குறிப்பாக DOT (Department of Telecommunications) என்று கூறப்படும் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே அவர்கள் தங்கள் சேவையைத் தொடர வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாதவர்கள் உடனடியாக மத்திய/மாநில அரசிடமிருந்து உரிய அனுமதி பெறுமாறு புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. மீறும் பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் எச்சரிக்கை செய்கிறது.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

இணைவழி குற்றங்கள்⭕மேலும் வெப்சைட் மற்றும் Appகளை உருவாக்கி இணைய வழி குற்றங்களில் ஈடுபட்டாலும் அல்லது வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இணைய வழி குற்றம் புரிவதற்கு உருவாக்கி கொடுத்தாலும் அது சட்டப்படி குற்றமாகும். அது அந்த App மற்றும் வெப்சைட்ஐ உருவாக்கி கொடுத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் எச்சரிக்கை செய்கிறது.

⭕மேலும் அணைத்துவிதமான இணையவழி குற்றம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் புகார் மற்றும் தகவல் சம்பந்தமாக இணையவழி குற்றப்பிரிவு இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் 0413 2276144, 9489205246  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.