சுந்தர் சி.+ விஷால் காம்போவின் ‘புருஷன்’ பூஜையுடன் ஆரம்பம்!
‘மதகஜராஜா’வின் மெகா ஹிட்டுக்கு அடுத்து நான்காவது முறையாக ‘புருஷன்’ படத்தின் மூலம் டைரக்டர் சுந்தர் சி.யும் ஹீரோ விஷாலும் கைகோர்த்து கலக்கப் போகிறார்கள். வழக்கம் போல் ‘பென்ஸ் மீடியா’ ஏ.சி.எஸ்.அருண்குமார் & ஆவ்னி சினிமேக்ஸ் குஷ்பு சுந்தர் இணைந்து தயாரிக்கும் ‘புருஷன்’ படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.
ஹீரோயினாக தமன்னா, காமெடிக்கு யோகிபாபு ஆகியோர் தற்போதைக்கு கமிட்டாகியுள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் ஷூட்டிங் தொடங்கும் போது வெளியாகும்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.