அந்த ஆதங்கம் பதட்டம் போக மாட்டிங்குது !
Dmart, hospital, bank இப்டி line ல நிக்கிற எங்க போனாலும் யாராவது queue வ follow பண்ணலேனா பட பட னு வருது. நம்ம கிட்ட permission கேட்டுட்டு முன்னாடி போய் நின்னாலும் பரவால்ல. அப்டியே வரிசைய கண்டுக்காம உள்ள நுழைவாங்க. என்னை அறியாம யாரும் நுழையுறாங்களா னு பாத்துட்டு இருக்குற மாதிரியே இருக்கு. வரிசைல நிக்குறோம் ங்க னு சொல்லிருவேனு வைங்க, ஆனா அந்த ஆதங்கம் பதட்டம் போக மாட்டிங்குது.
ஒருமுறை dmart ல அப்பாவும் பொண்ணும் சைடு கூடி எனக்கு முன்னாடி போய் நின்னுட்டாங்க. நானும் சொல்றேன், திட்டுறேன் அவங்க என்ன ஒரு ஆளாவே மதிக்கல. இதுங்க இப்டி தான்ற மாதிரி calm and composed ah நின்னாங்க. ஒரு வருசம் மேல ஆகிருக்கும் இப்ப வர அந்த calm ah நின்னவங்க முகம் மறக்கல. யோசிச்சு பாத்தா school படிக்கும் போது ரேஷன் கடைல ஒரு கார்டு தான வச்சுருக்க என் கார்டயும் சேத்து பதி னு சொல்றவங்க கிட்ட வரிசைல வாங்க னு சொன்னதெல்லாம் ஞாபகம் வருது.
வரிசைய follow பண்றத பாத்தா extreme calm இருக்கு. Follow பண்ணலேனா extreme stress ah இருக்கு. எதுவும் நோயா?
— கனிமொழி




Comments are closed, but trackbacks and pingbacks are open.